ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள், ரேங்கிங் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி "நம்பர்-1' இடத்தை இழந்தார். முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் தட்டிச் சென்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) புதிய ரேங்கிங் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி சமீபத்திய முத்தரப்பு தொடரில் சோபிக்காத இந்திய கேப்டன் தோனி, ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். இவர் 796 புள்ளிகள் பெற்றுள்ளார். முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ்(805 புள்ளி) கைப்பற்றினார். முத்தரப்பு தொடரில் அசத்திய...