நம்மூரில் கிளி ஜோதிடம் போல, ஐரோப்பிய நாடுகளில் "ஆக்டோபஸ்' கணிப்பு மிகவும் பிரபலம். இம்முறை உலக கோப்பை காலிறுதியில் ஜெர்மனி அணி வெற்றி பெறும் என்று அதிரடியாக கணித்துள்ளது. இதனால் அர்ஜென்டினா அணியினர் கதிகலங்கிப் போயுள்ளனர்.
தென் ஆப்ரிக்காவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. வரும் ஜூலை 3ம் தேதி நடக்கும் காலிறுதியில் முன்னாள் சாம்பியன்களாக ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
இரண்டுமே ஐரோப்பிய அணிகள் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் மாரடோனா பயிற்சியில் அர்ஜென்டினா சாதிக்கும் என கால்பந்து நிபுணர்கள் குறிப்பிட்டனர்....