
பக்ரைனில் நடக்கவுள்ள ‘பார்முலா–1’ கார்பந்தயத்தை, சச்சின் முதல் முறையாக காணவுள்ளார்.
இந்த ஆண்டுக்கான மூன்றாவது சுற்று கிராண்ட்பிரிக்ஸ் ‘பார்முலா–1’ கார்பந்தயம் பக்ரைனில் நாளை நடக்கிறது.
இங்கு, கிரிக்கெட் ரசிகர்கள் இல்லையெனிலும், ஜாம்பவான் சச்சினுக்கு மதிப்பு அதிகம்.
இந்நிலையில், இவரின் சாதனையை கவுரவிக்கும் வகையில், ‘பார்முலா–1’ தொடரை காண, பக்ரைன் இளவரசர் சல்மான் பின் ஹமத் சச்சினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சச்சினும், தனது குடும்பத்துடன் செல்லவுள்ளார். இத்தொடர் இரவில் நடக்க இருப்பது சிறப்பம்சம்.
சச்சின், எப்போதுமே கார்பந்தயப்பிரியர். ஏற்கனவே, 29வது டெஸ்ட் சதத்தை 2002ல் எட்டியபோது, கார்பந்தய வீரர் சூமாக்கர், பெராரி காரை இவருக்கு பரிசாக தந்தார். தவிர, கடந்த 2011ல் நடந்த இந்திய ‘பார்முலா–1’ தொடரை கண்டு ரசித்தார்.
0 comments:
Post a Comment