சென்னை அணி பங்கேற்கும் போட்டியை இலவசமாக காண வாய்ப்பு காத்திருக்கிறது.
வரும் மே 2ம் தேதி ஜார்க்கண்ட்டில் உள்ள ராஞ்சி மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன.
இதனை மாணவர்கள் இலவசமாக காண, ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ராஞ்சி மைதான வளாகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இவற்றை பூர்த்தி செய்து, பள்ளி முதல்வரிடம் ஒப்புதலுடன், நாளை மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பின் குலுக்கல் முறையில் 50 அதிர்ஷ்டசாலி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்....