சச்சின் கனவு திட்டம் அம்போ

விளையாட்டு போட்டிகளை கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டும்,'' என்ற இந்திய வீரர் சச்சினின் கோரிக்கைகள் இதுவரை ஏற்கப்படவில்லை. இத்திட்டம் கண்டு கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 40. சர்வதேச கிரிக்கெட்டில் "சதத்தில் சதம்' அடித்து சாதித்தவர். இதையடுத்து கடந்த ஆண்டு ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 

இதையடுத்து, இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை முன்னேற்ற, தேவையான நடவடிக்கைகள் அடங்கிய 2 பக்க அறிக்கையை, அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில், விளையாட்டு அமைச்சர் அஜய் மேகனிடம், கடந்த 2012, அக்., மாதம் தந்தார். 


முன்னேற்ற ஆலோசனைகள்:

சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் காணப்படுவதைப் போல, சச்சின் சில ஆலோசனைகள் தெரிவித்திருந்தார். இதன் படி, 

* பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டினை ஊக்குவித்து, பாடத்திட்டத்தில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும். 

* விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது

* 13 முதல் 15 வயதுள்ள திறமையானவர்களை கண்டறிந்து, முறையான பயிற்சி, போதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதால், 2020 ஒலிம்பிக்கில் அசத்தலாம் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகள் தெரிவித்து இருந்தார். 

இவற்றை, இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு (எஸ்.ஏ.ஐ.,) அனுப்பினார் அஜய் மேகன். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில்,"2020 ஒலிம்பிக்கில், 25 பதக்கம் வெல்வது தான் இலக்கு. இதற்கான வேலைகளை துவங்கப் போகிறோம்,' என, தெரிவிக்கப்பட்டது.

வேலை துவங்கவில்லை: அடுத்து விளையாட்டு அமைச்சராக ஜிதேந்திரா சிங் வந்த பின், இந்த கோரிக்கைகள் எல்லாம் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.
வங்கதேசம், தென் ஆப்ரிக்க நாடுகளில் கூட, "விஷன்-2020' என்ற பெயரில் இளம் வீரர், வீராங்கனைகளை கண்டறியும் பணி துவங்கப்பட்டு விட்டன. இந்தியாவில் இப்படிப்பட்ட எந்த வேலைகளும் இன்னும் துவங்கவில்லை. 

அமைச்சர் மறுப்பு: இடையில், எஸ்.ஏ.ஐ., முயற்சித்த போதும், "ஜூனியர்' மற்றும் "சீனியர்' அணிகள் பிரிவுகள் இணைவதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இந்திய தடகள கூட்டமைப்பு தலைவர் சுமரிவாலா, அமைச்சர் ஜிதேந்திராவிடம் இதுகுறித்து கேட்டபோது, பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. 


ஓய்வு பெற நெருக்கடியா 

இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் சச்சின் பங்கேற்கும் பட்சத்தில் 200வது டெஸ்டில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனை படைப்பார். 

இத்தொடருடன், இவர், ஓய்வு பெற வேண்டும் என பி.சி.சி.ஐ., தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment