மவுனம் கலைத்தார் சச்சின் - சூதாட்டத்தால் அதிர்ச்சிகிரிக்கெட் தொடர்பாக தவறான செய்திகள் வெளியாவது மனதிற்கு வேதனை அளிக்கிறது. கடந்த இரு வாரங்களாக நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது,'' என, சச்சின் தெரிவித்தார்.

 ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "ஸ்பாட் பிக்சிங்' எனும் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இது குறித்து கேப்டன் தோனி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் மவுனம் சாதித்து வருகின்றனர். இந்நிலையில், சூதாட்ட விவகாரம் குறித்து இந்தியாவின் சச்சின் கூறியது: 

கடந்த இரண்டு வாரங்களாக விரிவடைந்து கொண்டே செல்லும் சூதாட்ட விவகாரம், அதிர்ச்சி மற்றும் ஏமாற்றம் அளிக்கிறது. இது கோடிக்கணக்கான ரசிகர்களின் நம்பிக்கையை வீணடிக்கும் செயல். 

விரைந்து நடவடிக்கை எடுத்து, கிரிக்கெட்டின் நம்பகத்தன்மையை மீட்டு தரவேண்டும். எப்போதும் கிரிக்கெட்டை விளையாட்டு உணர்வுடன் தான் ஆட வேண்டும் என்பது தான் நான் கற்றும் கொண்ட முதல் பாடம். 

அதனால் கிரிக்கெட்டைப்பற்றி தவறான செய்திகள் வெளியாவது மனதிற்கு வேதனை அளிக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரருக்கு கடினமாக போராடும் குணம், உண்மையான விளையாட்டு உணர்வு எப்போதும் இருப்பது அவசியம். 

அதிகாரிகளை இப்பிரச்னையின் வேர் வரை சென்று நடவடிக்கை எடுக்கும்படி எல்லா கிரிக்கெட் வீரர்களையும் திரட்டி வலியுறுத்துவேன். 

0 comments:

Post a Comment