வெடிகுண்டு பீதியில் இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள் தங்கிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக லண்டன் போலீசார் சோதனை நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஒரே ஒரு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. "டுவென்டி-20' போட்டி வரும் 31ம் தேதி மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. இதற்கு முன்னதாக, கடந்த 26ம் தேதி கென்ட் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடியது. இப்போட்டியின் போது, இந்திய வீரர்களின் "டிரஸ்சிங் ரூமில்' சந்தேகத்துக்கு...

இந்திய அணிக்கு திரில் வெற்றி

கென்ட் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி, 78 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஒரு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் வகையில், மூன்று பயிற்சி போட்டிகளில் (50 ஓவர் போட்டி 2, ஒரு "டுவென்டி-20') விளையாடுகிறது. சசக்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று முன் தினம் நடந்த இரண்டாவது பயிற்சி...

ஐ.சி.சி., அணியில் சச்சின்

இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி., டெஸ்ட் அணியில், இந்தியா சார்பில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களை கவுரவிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஆண்டுதோரும், சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்யும். இந்த ஆண்டுக்கான அணியை, முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிளைவ் லாய்டு தலைமையிலான குழு தேர்வு செய்தது. இக்குழுவில் பால் ஆடம்ஸ்...

இந்திய அணிக்கு முதல் வெற்றி

இங்கிலாந்து தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த பயிற்சி போட்டியில் சசக்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் போட்டித் தொடர் வரும் செப். 3ம் தேதி துவங்குகிறது. இதற்கு முன்னதாக நேற்று இந்தியா, சசக்ஸ் அணிகள் இடையே பயிற்சி போட்டி(மழையால் 45 ஓவர்) நடந்தது. முதலில் பேட் செய்த சசக்ஸ் அணி 45 ஓவரில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு "டக்வொர்த்-லீவிஸ்...

எதிர்ப்பின்றி சரணடைந்த இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பெரிய அளவில், எவ்வித எதிர்ப்பும் இன்றி சரணடைந்தது வியப்பு தருகிறது,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதில் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின், அமித் மிஸ்ரா இருவரும் துணிச்சலான போராட்டத்தை வெளிப்படுத்தி, "டிரா' செய்யப்...

சச்சினை வீழ்த்திய திட்டம் அம்பலம்

சச்சின் விக்கெட்டை கைப்பற்ற இங்கிலாந்து அணி வகுத்த அதிரடி திட்டம் அம்பலமாகியுள்ளது. கணித நிபுணர் உதவியுடன் நவீன கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இவரது பலவீனங்களை கண்டறிந்துள்ளது. இதன் மூலம் சதத்தில் சதம் காணும் இவரது கனவை தகர்த்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. இம்முறை இந்திய வீரர் சச்சின், சர்வதேச அளவில் தனது 100வது...

கடினமான தொடராக தெரியவில்லை - ஸ்ரீசாந்த்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை, இந்திய அணி இழந்தாலும், இத்தொடரை கடினமான தொடராக தெரியவில்லை,'' என, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இது குறித்து ஸ்ரீசாந்த் கூறியது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்து, தர வரிசைப் பட்டியலில் "நம்பர்-1' இடத்தை இழந்திருந்தாலும், இத்தொடர் கடினமாக தெரியவில்லை. இதை விட கடினமான சவால்களையெல்லாம் இந்திய...

ஜாகிர் கானுக்கு ஆப்பரேஷன்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், கணுக்கால் காயத்துக்கு ஆப்பரேஷன் செய்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் இடம் பெற்றவர் ஜாகிர் கான். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் கணுக்காலில் காயமடைந்தார். பின் பயிற்சி போட்டியிலும் இது தொடரவே, பாதியில் நாடுதிரும்பினார். தற்போது இவரது கணுக்காலில் ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜாகிர் கான் தனது "டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில்,""எனது வலது கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக, கடந்த 15ம் தேதி ஆப்பரேஷன் செய்துள்ளேன். இது நல்லவிதமாக முடிந்துள்ளது,'' என, தெரிவித்துள்ளார். இந்த காயம்...

சோகத்தை தவிர்க்குமா இந்திய அணி?

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. ஏற்கனவே தொடரை இழந்த இந்திய அணி, இப்போட்டியில் வென்று மானம் காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை 0-3 என இழந்ததோடு, டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் "நம்பர்-1' இடத்தையும் பறிகொடுத்தது. இங்கிலாந்து முதலிடத்துக்கு...

இலக்கு இல்லாத இந்திய அணி

டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான புதிய இலக்குகளை இந்திய அணி நிர்ணயித்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் வரிசையாக தோல்வி அடைந்த இந்தியா, தொடரை இழந்ததோடு, டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் முதலிடத்தையும் கோட்டை விட்டது. இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேறியது. புள்ளிகள் குறைவு: கடந்த...

இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம்?

டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் வீழ்ச்சி பற்றி கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 3 டெஸ்டில் தோல்வி அடைந்து, "நம்பர்-1' இடத்தை இழந்ததற்கு மோசமான பேட்டிங்கே காரணம் என தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் அடித்துச் சொல்கிறார். தேசத்தை மறந்து பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்ததே தோல்விக்கு வித்திட்டதாக கூறப்படுகிறது. தவறான வீரர்கள் தேர்வு மற்றும் அளவுக்கு அதிகமான கிரிக்கெட் போட்டிகளே வீழ்ச்சிக்கு காரணம்...

இது போன்ற அணியை பார்த்ததில்லை - கங்குலி

இந்திய அணியின் பேட்டிங் இத்தொடரில் சிறப்பாக இல்லை. இங்கிலாந்து அணியிடம் "நம்பர்-1' இடத்தை ஒப்படைத்து விட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோன்ற இந்திய அணியை பார்த்ததில்லை,'' என, கங்குலி வருத்தம் தெரிவித்து உள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டிராவிட் தவிர, மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை கொடுக்கின்றனர். பவுலர்கள் மட்டமாக செயல்படும் நிலையில், பீல்டிங் அதைவிட மோசம். இதனால்...

இந்தியா இன்னிங்ஸ் தோல்வி: முதலிடத்தை இழந்தது

பிர்மிங்ஹாமில் நடந்த 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை இழந்தது. இங்கிலாந்து சென்ற இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது. பர்மிங்ஹாமில் 3வது டெஸ்ட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது....

இங்கிலாந்து வேகத்தில் சரிந்தது இந்தியா

பர்மிங்ஹாம் டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டையை கிளப்ப, இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு சுருண்டது. மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். தோனி மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. முக்கியமான மூன்றாவது டெஸ்ட், பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், "பீல்டிங்'...