ஹர்பஜன் சாதனை

ஹைதராபாத் டெஸ்டில் அடித்துள்ள சதத்தின் மூலம் 8-வது வீரராக களம் கண்டு தொடர்ந்து இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஹர்பஜன் சிங் படைத்துள்ளார். அவருக்கு இது 2-வது சதமாகும்.

நியூஸிலாந்து அணி கேப்டன் டேனியல் வெட்டோரி தொடர்ந்து இரு டெஸ்ட் ஆட்டங்களில் 140, 99 ரன்களை எடுத்திருந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.

ஆமதாபாதில் நடந்த முதல் டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த வேளையில், ஹர்பஜன் சிங் 115 ரன்கள் குவித்து இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் சதங்களின் மூலம் அணியின் நம்பிக்கைக்குரிய பின்வரிசை வீரராக பரிமளித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

இந்த ஆட்டத்தில் ஹர்பஜன் 7 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் 2010-ம் ஆண்டில் டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 14 சிக்ஸர்களுடன் ஹர்பஜன் முதலிடத்தில் உள்ளார்.

ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சேவாக்குடன் இணைந்து 2-ம் இடம் பிடித்தார். சித்து 8 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

0 comments:

Post a Comment