ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இப்பிரிவில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலப் பதக்கம் உறுதியாகி உள்ளது.
ஆடவர் அணிப் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை இந்திய-தாய்லாந்து அணிகள் மோதின. இதில், இந்திய வீரர்கள் சோம்தேவ் தேவ் வர்மன், சனம் சிங் ஆகியோர் தாய்லாந்து வீரர்களை வீழ்த்தி அணி அரையிறுதிக்கு முன்னேற வழிவகுத்தனர்.
முதல் ஆட்டத்தில் சனம் சிங், கிட்டிபோங் வசிரமனோவாங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதா வென்றார் சனம் சிங். அடுத்த செட்டில் கிட்டிபோங் கடும் நெருக்கடித் கொடுத்தார். எனினும், 6-4 என்ற கணக்கில் 2-வது செட்டையும் சனம் சிங்கே வென்றார்.
இரண்டாவது ஆட்டத்தில் தில்லி காமன்வெல்த் போட்டி சாம்பியன் சோம்தேவ் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் தனாய் உதோம்சோக்கை போராடி வென்றார். 1 மணி 43 நிமிடங்கள் இந்த ஆட்டம் நடந்தது. தாய்லாந்து அணி கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் சீன தைபே அணியை இந்திய அணி சந்திக்க உள்ளது
0 comments:
Post a Comment