
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஏலத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சச்சின், தோனி, சேவக் போன்றவர்களுக்கு 1.84 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர். இந்த ஏலத்தில் 62 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.,) கடந்த மூன்று ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற வீரர்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததால், நான்காவது தொடருக்காக வீரர்கள் ஏலம் விரைவில்...