நிகரற்ற வீரர் சச்சின்

ஐ.சி.சி., விருதுகளை வைத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை அளவிட முடியாது. அவர் நிகரற்ற வீரர்,'' என, யுவராஜ் தெரிவித்தார்.


கிரிக்கெட் அரங்கில் 20 ஆண்டுகளாக அசத்தி வருகிறார் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (169 போட்டி, 13837 ரன்கள்) மற்றும் ஒரு நாள் போட்டிகளில் (442 போட்டி, 17598 ரன்கள்) அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தவர். பல்வேறு சாதனைகளை படைத்தும், இதுவரை "கிரிக்கெட் ஆஸ்கர்' என அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விருது இன்னும் பெற வில்லை.



இது குறித்து சக வீரர் யுவராஜ் சிங் கூறியது: ஐ.சி.சி., விருது களை அடிப்படையாக வைத்து சச்சினை எடை போட முடியாது. கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை சச்சின் படைத்து விட்டார். அவரை யாரோடும் ஒப்பிட முடியாது. சச்சினுக்கு நிகர் சச்சின் தான்.


இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும். டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' அணியாக இந்தியா உள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிட முடியாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளித்தது. இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.


சச்சினுக்கு வாய்ப்பு:இதுவரை ஐ.சி.சி., விருது பெறாத சச்சின், இந்த ஆண்டு இப்பெருமை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த டெஸ்ட் மற்றும் சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரர் பரிந்துரை பட்டியலில் சச்சின் பெயர் இடம் பெற்றுள்ளது. வரும் அக். 6 ம் தேதி பெங்களூருவில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் சச்சினுக்கு அதிக வாய்ப்பு உள்ளது

0 comments:

Post a Comment