கடந்த 2001ல் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டெஸ்டில், இரட்டை சதமடித்து வெற்றிக்கு வித்திட்டது போல, இம்முறை மீண்டும் சாதிப்பேன்,'' என, இந்திய வீரர் லட்சுமண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கடந்த 2001ல் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி 171 ரன்களுக்கு சுருண்டு, "பாலோ-ஆன்' பெற்றது. பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு லட்சுமண் (281), டிராவிட் (180) கைகொடுத்தனர். இந்திய அணி 2வது இன்னிங்சில்...