சென்னை அணிக்கு தோனி நோ - கேப்டன் பதவிக்கு குட்பை

சூதாட்ட சர்ச்சை காரணமாக, சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகுகிறார். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பையும் உதற உள்ளார். கடந்த 2008ல் பிரிமியர் ‘டுவென்டி–20’ தொடர் துவங்கிய போது, சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.  இவரது சிறப்பான தலைமையில் சென்னை அணி 2010, 2011ல் சாம்பியன் பட்டம் வென்றது. 2010ல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ்...

தோனிக்கு பரிசாக ஒளிரும் ஸ்டம்ப்ஸ்

இந்திய அணி ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றால், கேப்டன் தோனிக்கு, ஒளிரும் ‘ஸ்டம்ப்ஸ்’ பரிசு தர உள்ளனர். வங்கதேசத்தில் ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இப்போட்டிகளின் போது, ஒளிரும் ‘ஸ்டம்ப்ஸ்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.                                இதன்படி விக்கெட் மீது பந்து பட்டதும், ‘பேட்டரியில்’ இயங்கும் எல்.இ.டி விளக்குகள் கொண்ட...

தொடருமா அமித் மிஸ்ரா மேஜிக்?

இந்திய பந்துவீச்சுக்கு புத்துயிர் அளித்துள்ளார் அமித் மிஸ்ரா. தனது ‘சுழல்’ மந்திரத்தால் எதிரணிகளை கட்டிப் போடும் இவர், ‘டுவென்டி–20’ உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, 31. கடந்த 2003ல் முதன் முதலாக இந்திய அணியில் இடம் பெற்ற போதும், இதுவரை 13 டெஸ்ட் (43 விக்.,), 23 ஒருநாள் (40 விக்.,) போட்டிகளில் தான் பங்கேற்றுள்ளார்.       பிரிமியர் போட்டி வரலாற்றில்,...

கிறிஸ் கெய்ல் 100வது டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி துவக்க வீரர் கிறிஸ் கெய்ல், தனது 100வது டெஸ்டில் களமிறங்க காத்திருக்கிறார். வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இம்மைல்கல்லை எட்ட உள்ளார்.       வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் கிறிஸ் கெய்ல், 34. கடந்த 1999ல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச அரங்கில் காலடி வைத்த இவர், 2000ம் ஆண்டு நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.  இதுவரை...

உலககோப்பைக்கு முன்பு விதிமுறையில் மாற்றம் இல்லை - ICC

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய விதிமுறைகள் 2011–ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்டது. பீல்டிங் கட்டுப்பாட்டு, 2 புதிய பந்துகள் ஆகிய விதிகள் கொண்டு வரப்பட்டது. இரண்டு முனையில் இருந்தும் புதிய பந்துகள் பயன்படுத்தப்பட்டன.  இதனால் சுழற்பந்து வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி இந்த விதியை மாற்றுமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. பேட்டிங் பவர் பிளேயில் 4 வீரர்கள் மட்டுமே எல்லை கோடு அருகே இருக்க வேண்டும். பேட்டிங்...

ஐ.பி.எல் சீசன் 7 க்கான போட்டி அட்டவணை வெளியீடு

7-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பெரும்பாலான போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மற்றும் வங்காளதேசத்தில் நடத்தப்படவுள்ளன.  இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 16-ம்தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் கொல்கத்தாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.  சார்ஜாவில் 17-ம்தேதி நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. 18-ம்...

ஓய்வு பெறுகிறார் சங்ககரா

சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சங்ககரா. இலங்கை அணியின் ‘சீனியர்’ வீரர் சங்ககரா, 36.  கடந்த 2000ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த இவர், இதுவரை 122 டெஸ்ட் (11,151 ரன்கள்), 369 ஒருநாள் (12,500), 50 சர்வதேச ‘டுவென்டி–20’ (1311) போட்டிகளில் விளையாடி உள்ளார்.  இவர், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.  இதுகுறித்து சங்ககரா கூறியது: வங்கதேசத்தில் நடக்கும் உலக...

எது சிறந்த வெற்றிக்கூட்டணி - சோதிக்க தோனிக்கு வாய்ப்பு

டுவென்டி-20’ உலக கோப்பை பயிற்சி போட்டியில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில், இந்திய அணிக்கான வெற்றிக்கூட்டணியை கண்டறிய கேப்டன் தோனி முயற்சிக்கலாம். ஐந்தாவது ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. இதில் ‘பிரிவு–2’ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் 21ம் தேதி ‘பரம எதிரியான’ பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக இன்றைய பயிற்சி போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது.             ...

விராத் கோஹ்லி நான்காவது இடம்

ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்தியாவின் விராத் கோஹ்லி 4வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் முதலிடத்துக்கு முன்னேறினார்.       சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வௌியிட்டது.  பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி (4வது...

நம்பிக்கை வைப்பாரா தோனி?

அஷ்வின், ஜடேஜாவை விட சிறப்பாக செயல்பட்ட போதும், தோனியின் ‘கடைக்கண்’ பார்வை கிடைக்காததால், அணியில் இடம் பெறமுடியாமல் தவிக்கிறார் அமித் மிஸ்ரா.              இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, 31. இதுவரை 13 டெஸ்ட் (43 விக்.,), 23 ஒருநாள் (40 விக்.,) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அணியில் இடம் பெற்ற போதும், பெரும்பாலான நேரங்களில் பார்வையாளராகவே சென்று திரும்புகிறார்.         ...

தலைமுறையின் சிறந்த வீரர் - பைனலில் சச்சின்-காலிஸ்-வார்னே

தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பைனல் பட்டியலில் சச்சின், காலிஸ், வார்னே இடம் பெற்றனர். சச்சின் விளையாடிய நாட்களில் கடுமையான போட்டி கொடுத்து வந்த வெஸ்ட் இண்டீசின் லாரா பின்தங்கினார்.       கிரிக்கெட் இணையதளம் சார்பில் 1993 முதல் 2013 வரையிலான 20 ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரர் தேர்வு செய்யப்படவுள்ளார்.  ‘தலைமுறையின் சிறந்த வீரர்’ என்ற பெயரிலான விருதுக்கு இந்தியாவின் சச்சின், வெஸ்ட் இண்டீசின் லாரா, தென்...

கால்பந்து களத்தில் கங்குலி

 பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் கோல்கட்டா அணியை வாங்குவது தொடர்பாக கங்குலி, நடிகர் ஷாருக்கான் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, 41. கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் துவக்கப்பட்ட போது, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின், 48, கோல்கட்டா அணியில் இடம் பெற்றார்.                           இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு...

இந்தியா, துபாய், வங்கதேசத்தில் பிரிமியர் தொடர்

ஏழாவது பிரிமியர் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், இந்தியா என 3 நாடுகளில் நடக்கவுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரிமியர் ‘டுவென்டி–20’ போட்டி தொடர் நடக்கிறது.  அடுத்த மாதம் லோக்சபா தேர்தல் துவங்குவதால், இத்தொடருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனால், ஏழாவது தொடர் இந்தியாவில் நடப்பது சந்தேகமாக இருந்தது.  இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், இந்தியா என 3 நாடுகளில் நடத்த, இந்திய கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏழாவது தொடர் வரும் ஏப்., 16ம் தேதி துவங்கி,...

டுவென்டி 20 உலக கோப்பையில் விறுவிறு

டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் கேப்டன் தோனி, ரெய்னா, யுவராஜ் சிங், ரவிந்திர ஜடேஜா அடங்கிய நால்வர் கூட்டணி, இந்திய அணிக்கு வெற்றி தேடித்தரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர், வரும் மார்ச் 16ல் வங்கதேசத்தில் துவங்குகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், குரூப் 2ல் இலங்கை, நியூசிலாந்து, தென்...

ஐ.சி.சி தரவரிசை - கோலி மீண்டும் முதலிடம்

ஐ.சி.சியின் ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இளம் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 12 மாதங்களில் கோலி 1580 ரன்கள் குவித்து 886 புள்ளிகள் பெற்றுள்ளார்.  அடுத்தடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி ஆகியோர் உள்ளனர். இந்திய அணியின் கேப்டன் டோனி 6-வது இடத்திலும், ஷிகர் தவான் 8-வது இடத்தில் உள்ளனர். ஆசியக்கோப்பையில் சிறப்பாக...

டெஸ்ட் ரேங்கிங் - இந்தியா பின்னடைவு

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி, இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை (ரேங்கிங்) பட்டியல் வெளியானது.  இதில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–1 என, வென்ற ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகள் கூடுதலாக பெற்று இரண்டாவது இடத்துக்கு (115) முன்னேறியது. இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருந்து, மூன்றாவது இடத்துக்கு (112) தள்ளப்பட்டது. தொடரை இழந்த போதிலும், தென் ஆப்ரிக்க அணியின் ‘நம்பர்–1’ இடத்துக்கு (127) ஆபத்து இல்லை. இங்கிலாந்து (107),...

லாராவை விட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன்

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் காலிஸ் அளித்த பேட்டியில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் லாராதான் என்று கூறினார். தெண்டுல்கரின் சாதனைகள் வியக்கத்தக்க என்றும் தெரிவித்தார். ஆனால் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்த வீரர் பிரெட்லி லாராவை விட தெண்டுல்கரே உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார். மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:– தெண்டுல்கர் பந்தை கணித்து விளையாடுவதில் மிகவும் வல்லமை பெற்றவர். பந்தை அதிவேகமாக...

அடுத்ததடுத்த தோல்விகள் அதிர்ச்சி அளிக்கவில்லை - கோஹ்லி

ஆசிய கோப்பை தொடரின் அடுத்ததடுத்த தோல்விகள் அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை,’’ என இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.  இதில் தனது முதல் லீக் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணி, இலங்கை, பாகிஸ்தான் என இரண்டு அணிகளுக்கு எதிராக தாக்குபிடிக்கமுடியாமல் தோல்வியை தழுவியது. தவிர, இத்தொடரின் பைனலுக்கான வாய்ப்பையும் கோட்டைவிட்டு வெளியேறியது. இந்நிலையில் இந்தியாவின்...

இந்தியாவை விரட்டினார் அப்ரிதி - கடைசி ஓவர் வரை டென்ஷன்

ஆசிய கோப்பை பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த அப்ரிதி, வெற்றி இலக்கை விரட்ட கைகொடுத்தார். தவிர, இந்தியாவின் பைனல் கனவுக்கும் வேட்டு வைத்தார். வங்கதேசத்தில் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த 6வது லீக் போட்டியில் ‘பரம எதிரிகளான’ இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்....

சங்ககராவிடம் சரிந்தது இந்தியா - கடைசி ஓவரில் இலங்கை வெற்றி

ஆசிய கோப்பை லீக் போட்டியில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  துாணாக நின்று சதம் அடித்த சங்ககரா, இலங்கை அணிக்கு கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய இந்திய வீரர் ஷிகர் தவானின் ஆட்டம் வீணானது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று நடந்த தொடரின் 4வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின.  இலங்கை அணியில் சுரங்கா லக்மலுக்கு பதிலாக அஜந்தா மெண்டிஸ்...