சென்னை அணியில் டாப் 5 வீரர்கள் யார்?ஏழாவது பிரிமியர் கிரிக்கட் தொடருக்கான வீரர்கள் ஏலம், வரும் பிப்., 12, 13ல் நடக்கவுள்ளது. 

இதற்கு முன் ஒவ்வொரு அணி நிர்வாகமும், எந்தெந்த வீரர்களை தக்க வைக்கின்றன என்ற விவரத்தை, ஜன.,10ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். 

இதன்படி, சென்னை அணியில் கேப்டன் தோனி நீடிப்பது உறுதி. 2010, 2011ல் சென்னை அணி சாதிக்க முக்கிய காரணமாக இருந்த அஷ்வின், ‘ஆல் ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா, ரெய்னாவும் அணியில் இருக்கலாம். 

கடந்த தொடரில் 18 போட்டிகளில் 32 விக்கெட் சாய்த்த வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோவும் தொடரலாம். அதேநேரம் மோகித் சர்மா, ஆல்பி மார்கல், மைக்கேல் ஹசியின் நிலை என்னாகும் எனத் தெரியவில்லை. 

மும்பை அணியை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், போலார்டு, மலிங்காவுடன், சமீபகாலமாக வேகத்தில் மீண்டும் மிரட்டி வரும் மிட்சல் ஜான்சன் என, ஐந்து பேர் உறுதியாக இருக்கலாம். அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் ஏலத்தில் மீண்டும் வாங்கப்படலாம். 


காம்பிர் நீடிப்பு:

கோல்கட்டா அணிக்கு கடந்த 2011ல் இருந்து கேப்டனாக உள்ள காம்பிர், 2012ல் கோப்பை வென்று கொடுத்தார். இவருடன், மனோஜ் திவாரி, யூசுப் பதான் மற்றும் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் தக்கவைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராஜஸ்தானை பொறுத்தவரையில் ரகானே, வாட்சன், பால்க்னர், டாம்பே நீடிக்க வாய்ப்பு உள்ளது.

0 comments:

Post a Comment