
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி சதம் வீணானது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேப்பியரில் இன்று துவங்குகியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணிக்கு கப்டில் (8), ரைடர் (18) சொதப்பல் துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த ராஸ் டெய்லர் (55), வில்லியம்சன் (71), இருவரும் அரைசதம் கடந்தனர்.
பின் வந்த கேப்டன் பிரண்டன் மெக்கலம் (30) ஓரளவு கைகொடுத்தார். ரான்கி (30), நாதன் மெக்கலம் (2) ஏமாற்றினார்.
கடைசி நேரத்தில் அதிரடியில் மிரட்டய கோரி ஆண்டர்சன் அரைசதம் கடக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தது. கோரி ஆண்டர்சன் (68), சவுத்தி (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட் வீழ்த்தினார்.
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்சமா ஜோடி துவக்கம் அளித்தது. ரோகித் சர்மா (3) தாக்குபிடிக்கவில்லை. தவான் (32) நிலைக்கவில்லை.
தொடர்ந்து வந்த ரகானே (7), ரெய்னா (18) ஏமாற்றினர். எதிர்முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோஹ்லி (123) ஒருநாள் அரங்கில் 18வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இவருக்கு நல்ல ‘கம்பெனி’ கொடுக்க கேப்டன் தோனி(40) ஓரளவு கைகொடுத்தார். பின்வரிசை வீரர்கள் ஏமாற்ற, இந்திய அணி 48.4 ஓவரில் 298 ரன்கள் எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஷமி (7) அவுட்டாகாமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1–0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
0 comments:
Post a Comment