கோஹ்லி அதிரடி சதம் - இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கோஹ்லி அதிரடியாக சதம் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1-2 என பின்தங்கியது.  நான்காவது, ஐந்தாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட, சிக்கல் ஏற்பட்டது. ஆறாவது போட்டி இன்று நாக்பூரில் நடந்தது. இதில் "டாஸ்' வென்ற...

இந்திய அணியின் நம்பர்-1 இடத்துக்கு ஆபத்து வருமா?

கடந்த இரு போட்டிகள் மழையால் ரத்தானதால், இந்திய அணியின் "நம்பர்-1' இடத்துக்கு இருந்த ஆபத்து நீங்கியது. சர்வதேச ஒருநாள் தரவரிசையில், கடந்த 2012, ஜூலை முதல் இந்திய அணி முதலிடத்தில் (122) உள்ளது. தற்போதைய ஆஸ்திரேலிய தொடரை, 1-6 என்ற கணக்கில் இழக்கும் பட்சத்தில் "நம்பர்-1' இடம் பறிபோகும் அபாயம் இருந்தது. இதற்கேற்ப, முதல் 3 போட்டிகள் முடிவில், இந்திய அணி 1-2 என, பின் தங்கி இருந்தது. அடுத்த இரு போட்டிகள் மழையால் ரத்தானது.  இதனால், மீதமுள்ள...

வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் தொடர் - ஜாகீர்கான் இடம் பெறுவாரா?

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.  முதல் டெஸ்ட் நவம்பர் 6–ந்தேதி முதல் 10–ந்தேதி வரை கொல்கத்தாவிலும், 2–வது டெஸ்ட் 14–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை மும்பையிலும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் நவம்பர் 21, 24, மற்றும் 27–ந்தேதிகளில் நடக்கிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி உத்தரபிரதேச அணியுடன் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில்...

20 ஓவர் உலகக்கோப்பை - முதல் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான்

20 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் வங்காளதேசத்தில் நடைபெறும் என ஏற்கனவே ஐ.சி.சி. அறிவித்தது.  இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமான போட்டி அட்டவணையை அறிவித்துள்ளது.  அதன்படி மார்ச் 16-ந்தேதி போட்டி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடக்கிறது. மார்ச் 16-ந்தேதி தகுதிச் சுற்று போட்டி நடக்கிறது.  மார்ச் 21-ந்தேதி லீக் சுற்று ஆரம்பிக்கிறது. ஏப்ரல் 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி அரை இறுதிப்போட்டியும் , ஏப்.6-ந்தேதி இறுதிப்போட்டியும்...

இந்திய அணிக்கு சிக்கல் - ஐந்தாவது போட்டியும் ரத்து

கட்டாக்கில் தொடர்ந்து மழை பெய்வதால், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டியும் ரத்து செய்யப்பட்டது.  இதனால் மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.  இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 1-2 என பின்தங்கியுள்ளது.  இன்று ஐந்தாவது போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில்...

விஸ்டன் கனவு அணியில் சச்சின்

விஸ்டன் கனவு டெஸ்ட் அணியில் சச்சின் இடம் பெற்றார். கிரிக்கெட் உலகின் பைபிள் என போற்றப்படும் விஸ்டன் இதழின் 150வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கனவு உலக டெஸ்ட் லெவன் அணி வெளியிடப்பட்டது.  இதில், இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக நான்கு பேர் இடம் பெற்றனர். கேப்டனாக மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா சார்பில் சச்சின் மட்டும் இடம் பிடித்தார்.  இவர் "பேட்டிங்' வரிசையில் 4வது வீரராக இடம் பெற்றார். கவாஸ்கர், கபில்தேவ், லாரா, காலிஸ், பாண்டிங் போன்றோர் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விஸ்டன்...

ஜாகிர் கானை தேர்வு செய்யலாமா?

இந்திய அணிக்கு மீண்டும் ஜாகிர் கானை தேர்வு செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், 35. கடந்த ஆண்டு கோல்கட்டாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பின் இந்திய அணியில் இருந்து போதிய உடற்தகுதி இல்லாதது, மோசமான "பார்ம்' காரணமாக நீக்கப்பட்டார்.  பிரான்ஸ் பயிற்சியாளர் டிம் எக்செட்டரிடம் சென்று, கடுமையான முயற்சிக்குப் பின், மீண்டு வந்தார். வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணிக்கு எதிரான மூன்றாவது நான்கு...

இப்படி இருந்தால் எப்படி இஷாந்த்

பந்துவீச்சில் சொதப்பும் இஷாந்த் சர்மா, தனது பயிற்சியாளரை சந்தித்து ஆலோசனை கூட பெறுவதில்லையாம். இப்படி இருந்தால் தனது தவறுகளை எப்படி திருத்திக் கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 25. கடந்த 2007ல் தனது 19வயதில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் (மிர்புர்) அறிமுகம் ஆனார்.  துவக்கத்தில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், போகப் போக ஏமாற்றினார். இதன் உச்சக்கட்டமாக மொகாலி போட்டியில், ஒரு ஓவரில்...

ஏன் இந்த பாணி... சொல்லுங்க தோனி

கேப்டன் தோனி ஆதரவு தெரிவிக்க, "ரன் வள்ளல்' இஷாந்த் சர்மா மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். கடந்த போட்டியில் தோற்ற நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள போட்டிக்கான இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.  இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் உள்ளது.  மீதமுள்ள நான்கு போட்டிகளில்(அக்., 23, 26, 30,...

ஆஸி.,யை ஜெயிக்க வைத்த இஷாந்த்

மொகாலி ஒருநாள் போட்டியில் சொதப்பலாக பந்துவீசிய இஷாந்த் சர்மா ஒரே ஓவரில் 30 ரன்களை வாரி வழங்க, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் கேப்டன் தோனியின் சதம் வீணானது.  இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நேற்று மூன்றாவது போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி,...

அகார்கர் ஓய்வுக்கு காரணம் என்ன?

இந்திய அணிக்காக விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என, தெரிந்ததால் தான் ஓய்வு பெற்றேன்,'' என, இந்திய வீரர் அகார்கர் தெரிவித்தார். இந்திய அணியின் "ஆல்-ரவுண்டர்' அகார்கர், கிரிக்கெட் அரங்கிலிருந்து நேற்று முன்தினம் விடை பெற்றார். கடைசியாக 2007ல் இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்றார்.  இதன் பின் இந்திய அணியில் இடம் கிடைக்காததால், ரஞ்சி தொடரில் மும்பை அணி கேப்டனாக விளையாடினார். ஓய்வு பெற்றது குறித்து அகார்கர் கூறியது:  கடந்த...

அனைத்து வீரர்களுக்கும் தெண்டுல்கர் சிறந்த ரோல் மாடல்

கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் அடுத்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். சொந்த மைதானமான மும்பையில் விளையாடும் 200–வது டெஸ்டோடு அவரது சகாப்தம் முடிகிறது. அனைத்து வீரர்களுக்கும் தெண்டுல்கர் சிறந்த முன்மாதிரி (ரோல்மாடல்) என்று இர்பான் பதான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– எனது கிரிக்கெட் ஆட்டத்தை தொடங்கியபோது தெண்டுல்கர் எனக்கு ஏராளமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். நான் பந்து வீசும்போது என் அருகில் வந்து...

சச்சினின் நம்பர்-10க்கு ஓய்வு

சச்சின் அணிந்து விளையாடும் "நம்பர்-10'க்கு ஓய்வு தர, மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உலகில் சிறப்பான விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும், 10ம் என்ற எண் கொண்ட ஜெர்சி அணிந்து தான் விளையாடுவர்.  கால்பந்து அரங்கில் அர்ஜென்டினாவின் மாரடோனா, இங்கிலாந்தின் வெய்ன் ரூனே உள்ளிட்டோரது ஜெர்சியில், இந்த எண் தான் இருக்கும். இதில் மாரடோனா ஓய்வுக்குப் பின், "நம்பர்-10', சக நாட்டு வீரர் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது.  இந்திய கிரிக்கெட்டில்,...

பேட்டிங், பவுலிங் என, எதுவுமே சரியில்லை

இந்திய அணியின் தோல்விக்கு எந்த ஒரு வீரரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சுமத்த விரும்பவில்லை. பேட்டிங், பவுலிங் என எதுவுமே சரியில்லாமல் போனது தான் தோல்விக்கு காரணம்,'' என, கேப்டன் தோனி கூறினார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. புனேயில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்தது.  இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது: புனே ஆடுகளம் 300 ரன்களுக்கும்...

தெண்டுல்கருடன் யாரையும் ஒப்பிட இயலாது

தெண்டுல்கருடன் யாரையும் ஒப்பிட இயலாது என்று பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்ரிடி கூறியள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– தெண்டுல்கர் எப்போதுமே தனது விருப்பப்படியே விளையாடுவார். அவருடன் யாரையும் ஒப்பிட இயலாது. அவருடன் நான் அதிகமான போட்டியில் விளையாடி இருக்கிறேன்.  இந்த பூமியில் பிறந்த அற்புதமான வீரர். பழகுவதற்கு எளிமையானவர். உண்மையிலேயே தெண்டுல்கர் தான் தொழில் ரீதியான கிரிக்கெட் வீரர் ஆவார்.  ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்து...

சச்சின் ஆசை நிறைவேறுமா?

எதிர்பார்த்தது போலவே சச்சின் தனது 200வது டெஸ்ட் போட்டியை, சொந்த ஊரான மும்பையில் விளையாட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. இதுவரை 198 டெஸ்டில் விளையாடி உள்ள இவர், அடுத்து நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம், 200வது டெஸ்டில் விளையாட உள்ளார்.  இப்போட்டியுடன் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டியில் இருந்து ஒட்டுமொத்தமாக விடைபெற உள்ளார். இந்தியா...

சச்சின் இடத்தை நிரப்ப முடியாது

கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் 200–வது டெஸ்டுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  1989–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அப்போது அவருக்கு 16 வயது. 1990–ம் ஆண்டு இங்கிலாந்து எதிரான போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தனது அதிரடி ஆட்டம் மூலம் ரசிகர்கள் ஈர்த்த அவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம், டெஸ்ட் மற்றும்...

ஓய்வு நாளை எதிர்நோக்கி சச்சின் ...

வெஸ்ட் இண்டீஸ்சுடன் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகஇருப்பதாகவும், இந்த நாளை எதிர் நோக்கி இருப்பதாகவும், இது வரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் பி,சி.சி.ஐ.,க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். 1989 முதல் இந்தியாவிற்கென ஆடி வரும் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் இது வரை டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரத்து 837 ரன்கள் எடுத்துள்ளார். 51...

சிறப்பாக ஆடி விட்டுதான் தெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணையாளருமான கங்குலி கூறியதாவது:– தெண்டுல்கரின் ஓய்வு பற்றிதான் அதிகமாக யூகிக்கப்படுகிறது. அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அவர் ஓய்வு பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்புகிறேன்.  ஆனால் அவர் நல்ல நிலையில் இருக்கும் போதுதான் ஓய்வு பெற வேண்டும். வெற்றி பெறக்கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகுதான் அவர் ஓய்வு பெற வேண்டும். இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்...

ராஜஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் யார்?

ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷேன் வாட்சனை நியமிக்கலாம்,'' என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அப்டன் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் நடந்த ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் பைனலில் மும்பை அணி, ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியுடன் மும்பை அணியின் சச்சின், ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் விடைபெற்றனர்.  இதையடுத்து ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய "ஆல்- ரவுண்டர்' ஷேன் வாட்சன் நியமிக்கப்படலாம்...

விடைபெற்றனர் சச்சின், டிராவிட்

சாம்பியன்ஸ் லீக் கோப்பையை மும்பை அணி இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ராஜஸ்தான் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது.  இப்போட்டியுடன் இந்திய கிரிக்கெட்டின் இரு "இமயங்களான' சச்சின், டிராவிட் "டுவென்டி-20' அரங்கில் இருந்து விடைபெற்றனர். இந்தியாவில் ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் தொடர் நடந்தது. நேற்று இரவு டில்லியில் நடந்த பைனலில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ராஜஸ்தான்...

தெண்டுல்கரை போன்று 40 வயது வரை விளையாடுவேன் - கோலி

டெல்லியில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் 24 வயதான விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:- சச்சின் தெண்டுல்கரை போன்று நானும் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவேன் என்று நம்புகிறேன். அவரது வயதை எட்டும் போது (இப்போது சச்சினின் வயது 40) நானும் தொடர்ந்து உடல்தகுதியுடன் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்தனை வயதிலும் அவர் உடல்தகுதியுடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.  தெண்டுல்கர்...

சேவக், காம்பிர் ஏமாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்தியா "ஏ' அணியின் சீனியர் வீரர்களான சேவக், காம்பிர் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றினர். இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணி, மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் (நான்கு நாள்) பங்கேற்கிறது. மைசூரில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் ஷிமோகா நகரில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில், முதல் இன்னிங்சில்...

தோனியின் புது ஸ்டைல்

சென்னை அணி கேப்டன் தோனி இப்போது "லுங்கி' கட்ட துவங்கிவிட்டார் போலத் தெரிகிறது. மற்ற வீரர்களும் "பைஜாமாவில்' காணப்பட்டது வித்தியாசமாக இருந்தது. இந்திய கிரிக்கெட்டில் மூன்று வித அணிக்கும் கேப்டன் தோனி. தனது தலைமுடியை பல்வேறு "ஸ்டைலில்' மாற்றிக் கொள்வார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் "மொஹாக்' முறையில் (கீரிப்புள்ள) களமிறங்கினார்.  இப்போது தமிழகத்தின் பிரபலமான "லுங்கி' கட்டத்துவங்கி விட்டார் போல. டில்லி செல்ல ராஞ்சி விமான நிலையம் வந்த போது,...

ஷேவாக், காம்பீர் எதிர்காலம் கேள்விகுறி

2011–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சீனியர் வீரர்கள் ஷேவாக், காம்பீர், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் ஆகியோர் மோசமான ஆட்டம் மற்றும் உடல் தகுதி காரணமாக அணியில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டனர். இதில் யுவராஜ்சிங் மட்டும் தற்போது ஆஸ்திரேலியவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளார். மற்ற வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் கிடைக்கும் என்று ஷேவாக், காம்பீர்...

50000 ரன்களை எட்டுவாரா சச்சின்?

சாம்பியன்ஸ் லீக் தொடரில் மும்பை அணி, பெர்த் அணியை எதிர்கொள்கிறது. இதில் சச்சின், 26 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், சர்வதேச போட்டிகளில் 50,000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமை பெறலாம். ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. 10 அணிகள், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. "ஏ' பிரிவில் 12 புள்ளிகள் பெற்ற ராஜஸ்தான் அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.  மும்பை அணியை பொறுத்தவரையில் முதல்...