மவுனம் கலைத்தார் சச்சின் - சூதாட்டத்தால் அதிர்ச்சி

கிரிக்கெட் தொடர்பாக தவறான செய்திகள் வெளியாவது மனதிற்கு வேதனை அளிக்கிறது. கடந்த இரு வாரங்களாக நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது,'' என, சச்சின் தெரிவித்தார்.  ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "ஸ்பாட் பிக்சிங்' எனும் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இது குறித்து கேப்டன் தோனி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் மவுனம் சாதித்து வருகின்றனர். இந்நிலையில், சூதாட்ட விவகாரம் குறித்து இந்தியாவின் சச்சின் கூறியது:  கடந்த இரண்டு...

சூதாட்ட புயலில் ரெய்னா, ஆர்.பி.சிங்

சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் போலீசார் கண்காணிப்பு வளையத்தில் ரெய்னா, ஆர்.பி.சிங் உள்ளிட்ட 10 உ.பி., வீரர்கள் சிக்கியுள்ளனர். ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான், பாலிவுட் நடிகர் வின்டூ, சென்னை அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் என, பலர் கைது செய்யப்பட்டனர்.  இதுதொடர்பாக டில்லி, மும்பை, சென்னை மற்றும் உ.பி., போலீசார் இணைந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே...

சென்னை வீரர்கள் 3 பேருக்கு தொடர்பு

பிக்சிங்' விவரகாரத்தில் ஒரு "சீனியர்' வீரர் உட்பட மொத்தம் சென்னை அணியின் மூன்று வீரர்கள் சிக்கவுள்ளனர். விரைவில் இவர்கள் கைதாகலாம். ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளில் "பிக்சிங்' செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் பிடிபட்டனர்.  இதன் பின் இவ்விவகாரத்தில் தினமும் ஒரு புதுத்தகவல் வெளியாகிறது.  இதுவரை மொத்தம் 21க்கும் மேற்பட்டோர் டில்லி டில்லி போலீசிடம் சிக்கியுள்ளனர். இதனிடையே,...

சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணை

கிரிக்கெட் சூதாட்ட விசாரணை தீவிரமடைகிறது. ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்ட வீரர்கள் மற்றும் "புக்கி'களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து கண்டறிய முக்கிய ஓட்டல்களின் "சிசிடிவி' கேமராவில் பதிவான படங்களை டில்லி போலீசார் சோதனை செய்ய உள்ளனர்.  தவிர, சூதாட்ட விவகாரம் தொடர்பாக நேற்று ஒரு கிரிக்கெட் வீரர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்ற ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரும் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்டு, டில்லி போலீசிடம் பிடிபட்டனர்....

திறமை இல்லாத ஐ.சி.சி. - ஆஸி., வீரர்கள் சங்கம் தாக்கு

விளையாட்டு உலகின் மிகவும் மோசமான, திறமையற்ற நிர்வாகமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) உள்ளது,' என, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ஏ.சி.ஏ.,) தெரிவித்தது.  ஐ.சி.சி., வீரர்கள் பிரதிநிதி கமிட்டி உறுப்பினராக, முன்னாள் இந்திய வீரர் சிவராமகிருஷ்ணன் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), இருப்பதாக புகார் எழுந்தது. இதனால், தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு கிளம்பின.  இதுகுறித்து ஏ.சி.ஏ., தலைவர் பால் மார்ஷ்...

பிரிக்க முடியாத கிரிக்கெட்டும் சூதாட்டமும்

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்ற ராஜஸ்தான் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகிய மூவரும் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்டு, டில்லி போலீசிடம் பிடிபட்டனர். தற்போது, 5 நாள் போலீஸ் காவலில் உள்ள இவர்களிடம் தீவிர விசாரணையின் நடக்கிறது. கிரிக்கெட்டில் சூதாட்டம் நடப்பது புதிதல்ல. இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான இதில், பல ஆண்டுகளாக சூதாட்டம் நடந்து வருகிறது. 1979-80: இந்தியா-பாகிஸ்தான்...

3 ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 வீரர்கள், 11 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  கடந்த 5-ம் தேதி நடைபெற்ற புனே வாரியர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின்போது சூதாட்டம் நடந்துள்ளது. இதேபோல் 9-ம் தேதி ராஜஸ்தான்-பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியிலும் சூதாட்டம் நடந்துள்ளது.  புனே அணிக்கு எதிராக சண்டிலா சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு ஓவரில் குறிப்பிட்ட ரன்களை விட்டுக் கொடுப்பதற்காக கூறி சூதாட்டம்...

பதான் செய்த தவறால் திருப்புமுனை

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ராஞ்சியில் நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது.  முதலில் ஆடிய புனே வாரியர்ஸ் அணிக்கு, விக்கெட் கீப்பர் உத்தப்பாவும், கேப்டன் ஆரான் பிஞ்சும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். உத்தப்பா 21 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 25 ரன்கள் அடித்தார். 32 பந்துகளை எதிர்கொண்ட பிஞ்ச், 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசினார். இவர்கள் பெவிலியன் திரும்பிய பிறகு அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திய மணீஷ் பாண்டே,...

பிளவு படுகிறதா கிரிக்கெட் உலகம்

சிவராமகிருஷ்ணன் விவகாரத்தில், இந்தியாவுக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதனால், கிரிக்கெட் உலகில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வீரர்கள் பிரதிநிதி கமிட்டி உறுப்பினராக, முதலில் ஆஸ்திரேலியாவின் டிம் மே தேர்வானார். இதில் குழப்பம் நடந்ததாக கூறிய ஐ.சி.சி., முன்னாள் இந்திய வீரர் சிவராமகிருஷ்ணன், தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தது.  இதில் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு...

மும்பை ரசிகர்கள் திருந்துவார்களா?

விராத் கோஹ்லியை மட்டுமல்ல, ஜாம்பவான் சச்சினையும் மும்பை ரசிகர்கள் கேலி செய்துள்ளனர்.  பெங்களூரு, மும்பை அணிகள் மோதிய பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டி மும்பையில் நடந்தது. இதில் பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லி, ரன் அவுட் கேட்டதற்கு, மும்பை ரசிகர்கள் "துரோகி' என்று குரல் எழுப்பினர்.  இதுகுறித்து கோபமடைந்த கோஹ்லி,"" நான் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் போது, இதே ரசிகர்கள் எனக்கு உற்சாகம் அளிப்பார்கள்,'' என்றார்.  மும்பை ரசிகர்களை பொறுத்தவரை எப்போதுமே அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார். இதற்கு சில உதாரணங்கள்... கவாஸ்கர்: கடந்த...

இஷாந்த் சர்மாவை தேர்வு செய்தது தவறு

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஜூன் 6-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  வேகப்பந்து வீரர்களில் இஷாந்த் சர்மா, வினய்குமார், புவனேஸ்வர்குமார், உமேஷ்யாதவ், இர்பான் பதான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  இஷாந்த் சர்மாவை சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தேர்வு செய்தது தவறு என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான வாசிம்அக்ரம் கூறியுள்ளார்.  முன்னாள் கேப்டனான அவர் இது குறித்து கூறும்போது, சாம்பியன்ஸ் டிராபி...

தோனி மீது வழக்கு

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கேப்டன் தோனி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி, 31. இவர் பல்வேறு பொருட்களுக்கு விளம்பர "மாடலாக' உள்ளார்.  இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஆங்கில பத்திரிகை ஒன்று, அட்டை படத்தில் தோனியை விஷ்ணு மாதிரி சித்தரித்து இருந்தது.  கைகளில் பல விளம்பர பொருட்கள் இருந்தன. அதில், ஒரு கையில் "ஷூ' இடம் பெற, பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.  இதற்கும் தோனிக்கும் சம்பந்தம் கிடையாது. சம்பந்தப்பட்ட பத்திரிகை தான் கற்பனையாக படத்தை வெளியிட்டு உள்ளது.  ஆனால், இந்து கடவுள்...

சேவக்கை சுற்றி வளைத்த கும்பல்

போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சேவக் உள்ளிட்ட வீரர்களை, கும்பலாக சுற்றி வளைத்ததால், ஒரே நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பினர்.  பிரிமியர் கிரிக்கெட் தொடரில், டில்லி அணிக்காக விளையாடி வருகின்றனர் இந்திய வீரர்கள் சேவக், ஆஷிஸ் நெஹ்ரா மற்றும் நமன் ஓஜா. இவர்கள் டில்லியில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  ஹெல்மெட் அணிவது, பாதுகாப்பாக பயணம் செய்வது உள்ளிட்ட பல விதிகளை வலியுறுத்த இருந்தனர்....

ஐ.பி.எல். போட்டியில் தெண்டுல்கர் சாதனை

ஐ.பி.எல். போட்டியில் அதிக பவுண்டரி அடித்தவர் என்ற சாதனையை தெண்டுல்கர் படைத்தார். கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 8 பவுண்டரி அடித்தார்.  இதன்மூலம் அவர் அதிக பவுண்டரி அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவர் 289 பவுண்டரி அடித்துள்ளார்.  ஐ.பி.எல். போட்டியில் அதிக பவுண்டரி அடித்த வீரர்களில் `டாப் 5' வீரர்கள் வருமாறு:-  1. தெண்டுல்கர் (மும்பை): 289 பவுண்டரி- 76 மேட்ச்.  2. காம்பீர் (கொல்கத்தா):...

200வது டெஸ்டில் சச்சின்

கடந்த 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் நீடித்து வரும் சச்சினுக்கு, 200 வது டெஸ்டில் பங்கேற்க தகுதி உள்ளது,'' என, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிரட் லீ தெரிவித்தார். இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. இவர் 198 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இன்னும் 2 போட்டிகளில் பங்கேற்கும் பட்சத்தில், 200வது டெஸ்டில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனை படைக்கலாம்.  இதுகுறித்து பிரட் லீ கூறியது: சச்சின் ஓய்வு பெற வேண்டும் என, பல்வேறு...

IPL போட்டியில் 2000 ரன்னை கடந்த 10-வது வீரர் டிராவிட்

ஐ.பி.எல். போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் கேப்டன் டிராவிட் அபாரமாக விளையாடி 40 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 58 ரன் எடுத்தார்.   இதில் 40-வது ரன்னை எடுத்தபோது ராகுல் டிராவிட் 2 ஆயிரம் ரன்னை தொட்டார். 82 ஆட்டத்தில் விளையாடி அவர் 2011 ரன் எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் 2 ஆயிரம் ரன்னை எடுத்த 10-வது வீரர் டிராவிட் ஆவார்.   இந்த 6-வது ஐ.பி.எல். தொடரில் கிறிஸ் கெய்ல், ஷேவாக், டோனி, விராட் கோலி ஆகியோர் 2 ஆயிரம் ரன்னை எடுத்து இருந்தனர். அந்த...

டிராவிட் மீது அதிக மதிப்பு - பணிந்தார் காம்பிர்

டிராவிட் மீது எப்போதுமே அதிக மதிப்பு உண்டு. அவருக்கு எதிராக கடும் வார்த்தைகளை பயன்படுத்தவில்லை,'' என, காம்பிர் தெரிவித்தார். கோல்கட்டாவில் நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், காம்பிரின் கோல்கட்டா அணி, டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.  இதில், ராஜஸ்தானின் வாட்சன், கோல்கட்டாவின் பிஸ்லா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காம்பிர், டிராவிட் உரசிக் கொள்ள, பிரச்னை பெரிதானது.  இத்தொடரில் காம்பிர், இரண்டாவது முறையாக எதிரணி வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முன்னதாக பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லியுடன்...

யுவராஜ், காம்பிர் நீக்கம் - ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் வாய்ப்பு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங், கவுதம் காம்பிர் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. ஷிகர் தவான், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றனர். இங்கிலாந்தில், வரும் ஜூன் 6-23ம் தேதிகளில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி, கடந்த ஏப்., 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில்...

IPL 6 - புதிய சாதனை

பஞ்சாப் அணிக்கு எதிராக சதம் அடித்த ரெய்னா, பிரிமியர் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.  இதன் மூலம் சர்வதேச "டுவென்டி-20' (தென் ஆப்ரிக்கா, 2010, 101 ரன்கள்) மற்றும் பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.  இதற்கு முன் கெய்ல், பிரண்டன் மெக்கலம் என, இருவரும் இந்த இலக்கை எட்டியுள்ளனர். * நேற்று 53 வது பந்தில் சதத்தை எட்டிய ரெய்னா, பிரிமியர் வரலாற்றில் அதிவேக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் 14வது இடத்தை பெற்றார். முதல் மூன்று இடங்களில் கெய்ல் (30 பந்து), யூசுப் பதான்...

ஐ.பி.எல். போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

6-வது ஐ.பி.எல். போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதுபற்றிய ஒரு பார்வை:- கிறிஸ்கெய்ல் (பெங்களூர்) ஐ.பி.எல். போட்டியில் தொடர்ந்து 3-வது முறையாக கிறிஸ்கெய்ல் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த இரண்டு ஐ.பி.எல். போட்டியிலும் அதிக ரன் எடுத்த வீரர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். இந்த முறையும் அவர் தான் முன்னிலையில் உள்ளார். 10 ஆட்டத்தில் 484 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக்ரேட் 166.89. 36...

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி தேர்வு எப்போது?

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி மே 4ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட உள்ளது. இங்கிலாந்தில், வரும் ஜூன் 6-23ம் தேதிகளில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.  லீக் சுற்றின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் தலா முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், வரும் ஜூன் 19, 20ம் தேதிகளில் நடக்கவுள்ள அரையிறுதியில் விளையாடும். பைனல், ஜூன் 23ம் தேதி பர்மிங்காமில் நடக்கவுள்ளது. "ஏ' பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து...