
முத்தரப்பு தொடரில் அதிசயம் அரங்கேறியது.நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில், விராத் கோஹ்லி சதம் விளாச, இந்திய அணி 321 ரன்களை 36.4 ஓவரில் எடுத்து "சூப்பர்' வெற்றி பெற்றது. இதன் மூலம் முக்கியமான போனஸ் புள்ளியை பெற்று, "பைனல்' வாய்ப்பை தக்க வைத்தது. இலங்கையின் தில்ஷன், சங்ககராவின் சதம் வீணானது. மார்ச் 2ல் நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை வீழ்த்தினால், இந்தியா பைனலுக்கு செல்வது உறுதி. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு...