
காயத்தில் இருந்து தப்பிக்க, போட்டியில் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்,'' என, இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக் தெரிவித்துள்ளார்.இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ.,6ம் தேதி டில்லியில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில், தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட அதிரடி துவக்க வீரர் சேவக் இடம் பெற்றுள்ளார். இதுகுறித்து சேவக் கூறியதாவது: காயம், உடற்தகுதி...