ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய வீரர் கவுதம் காம்பிர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ஹர்பஜன் சிங், 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஹர்பஜன் பின்னடைவு: பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், 4 இடங்கள் தள்ளப்பட்டு 12வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஜாகிர் கான், 6வது இடத்துக்கு முன்னேறினார். பவுலிங்கில் ஏமாற்றிய இஷாந்த் சர்மா, 22வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பந்துவீச்சில் அசத்திய தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், தொடர்ந்து "நம்பர்-1' இடத்தில் உள்ளார். சுழலில் அசத்திய பவுல் ஹாரிஸ் 9வது இடத்துக்கு முன்னேறினார். இரண்டாவது, 3வது இடத்தில் முறையே மிட்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா), முகமது ஆசிப் (பாகிஸ்தான்) ஆகியோர் உள்ளனர்
காம்பிர் தொடர்ந்து "நம்பர்-1'
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), டெஸ்ட் வீரர்களுக்கான ரேங்கிங் பட்டியலை துபாயில் நேற்று அறிவித்தது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் காம்பிர் (840 புள்ளி) தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
நாக்பூர் டெஸ்டில் சதமடித்து அசத்திய சேவக் (6வது), சச்சின் (9வது), "டாப்-10' வரிசையில் இடம் பிடித்தனர். இதேபோல இரட்டை சதமடித்த தென் ஆப்ரிக்காவின் ஆம்லா 10வது, சதமடித்த காலிஸ் 4வது இடத்துக்கு முன்னேறினர்.
இலங்கையின் மகிலா ஜெயவர்தனா, சங்ககரா தொடர்ந்து முறையே 2வது, 3வது இடத்தில் உள்ளனர்.
0 comments:
Post a Comment