பிராட்மேனை விட சிறந்த வீரர் சச்சின்

கிரிக்கெட் அரங்கில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஆஸ்திரேலியாவின் பிராட்மேனை விட சிறந்தவர்,'' என, இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.சமீபத்தில் குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சச்சின் இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒரு நாள் அரங்கில் 200 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இவரது சாதனை குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது: ஒருநாள் அரங்கில் முதல் இரட்டை சதமடித்து சாதனை படைத்த சச்சினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவரை பாராட்டிய சில வீரர்களை இவரை, பிராட்மேனுடன்...

டி20 உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி தேர்வு

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் என்.ஸ்ரீனிவாசன் வியாழக்கிழமை இதை அறிவித்தார்.மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கயானா, பார்படாஸ் மற்றும் செயின்ட் லூசியா ஆகிய இடங்களில் ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்களைத் தேர்வு செய்வதற்காக தேர்வுக் கமிட்டியின் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு புதுமுக வீரர்கள் உள்பட 30 பேர்...

சச்சினுக்கு "பாரத் ரத்னா' விருது

சாதனை நாயகன் சச்சினுக்கு, நாட்டின் மிக உயர்ந்த "பாரத் ரத்னா' விருது வழங்க வேண்டுமென, முன்னாள் கேப்டன் கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 31,041 ரன்கள் மற்றும் 93 சதங்கள் அடித்து, சாதனை மன்னனாக திகழ்கிறார் இந்தியாவின் சச்சின். சமீபத்தில் குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கோஹினூர் வைரம்:சச்சினின் 200 ரன் சாதனை குறித்து இந்திய அணியின்...

ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு "401'

ஒருநாள் போட்டியில் 200 ரன்களை கடந்து சாதித்தது போன்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் 401 ரன்கள் எடுத்து, வெஸ்ட்இண்டீசின் லாராவின் (400*) சாதனையை, சச்சின் தகர்க்க வேண்டும் என்பது தான், ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.இந்திய கிரிக்கெட்டின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (36). 442 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 17598 ரன்கள் குவித்துள்ள இவர், முதல் வீரராக 200 ரன்களை கடந்து (முந்தைய சாதனை, 194 ரன்கள்) சாதித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதம் (46) எடுத்துள்ள வீரர்களில் முதலிடம் வகிக்கிறார். டெஸ்டில் "401':தான் பங்கேற்ற 166 டெஸ்டில் சச்சின்,...

வாழும் வரலாறு சச்சின்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு தின ஆட்டத்தில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாடி ஒரு தின ஆட்டங்களில் இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சச்சின் 147 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 3 சிக்சர், 25 பெüண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்தார்.இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஆட்டம் குவாலியரில் புதன்கிழமை நடைபெற்றது.முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில்...

சச்சின் புதிய உலக சாதனை

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், இரட்டை சதமடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது போட்டி குவாலியரில் இன்று நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சேவக் (9) ஏமாற்றினார். பின்னர்...

உலககோப்பை தொடர் இடமாற்றம்

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய துணைக் கண்டத்தில் உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல், உலகின் மற்ற அணிகளுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உலககோப்பை தொடர், திட்டமிட்ட படி, இந்திய துணைக் கண்டத்தில் நடக்குமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு தலைவர் ஜஸ்டின் வான் கூறியது: இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பாக...

கைமாறுகிறது ஐ.பி.எல்., அணிகள்

ஐ.பி.எல்., அணிகளின் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதால், தங்களது அணிகளை விற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) சார்பில் "டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு பாதுகாப்பு பிரச்னை காரணமாக இரண்டாவது தொடர், தென் ஆப்ரிக்காவில் நடந்தது. தொடரும் பிரச்னை: தற்போது மூன்றாவது தொடர் வரும் மார்ச் 12ம் தேதி இந்தியாவில் துவங்குகிறது. இந்த முறையும் பிரச்னைகள் தொடருகின்றன. ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை எந்த...

காம்பிர் தொடர்ந்து "நம்பர்-1'

ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய வீரர் கவுதம் காம்பிர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ஹர்பஜன் சிங், 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), டெஸ்ட் வீரர்களுக்கான ரேங்கிங் பட்டியலை துபாயில் நேற்று அறிவித்தது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் காம்பிர் (840 புள்ளி) தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். நாக்பூர் டெஸ்டில் சதமடித்து அசத்திய சேவக் (6வது), சச்சின் (9வது), "டாப்-10' வரிசையில் இடம் பிடித்தனர். இதேபோல இரட்டை சதமடித்த...

இந்தியாவுக்கு 175 பதக்கம்

தெற்காசிய விளையாட்டில் வழக்கம் போல் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. மொத்தம் 175 பதக்கங்களுடன் முதலிடத்தை கைப்பற்றி அசத்தியது. "சார்க்' அமைப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்கும், 11வது தெற்காசிய விளையாட்டு போட்டி தாகாவில் நடந்தது. கடந்த 12 நாட்களாக நடந்த இப்போட்டிகள், நேற்று நிறைவு பெற்றன. இரண்டு தங்கம்:கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் பைனலில் இந்தியாவின் மதுரிகா, சக நாட்டு வீராங்னையான ஷாமினியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில்...

யாருக்கு கேப்டன் பதவி?

இந்திய ஹாக்கியில் மீண்டும் புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. அணியின் கேப்டனாக யாரை தேர்வு செய்வது என்பதில், ஹாக்கி இந்தியா அமைப்பு மற்றும் பயிற்சியாளர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.உலககோப்பை ஹாக்கி தொடர் வரும் 28 ம் தேதி முதல் மார்ச். 13 வரை இந்தியாவில் நடக்க உள்ளது. தொடருக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் இந்திய ஹாக்கியில் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. உலககோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், கேப்டனாக ராஜ்பால் சிங்கை நியமித்தது ஹாக்கி இந்தியா அமைப்பு. ஆனால் இதற்கு அணியின் பயிற்சியாளர் ஜோஸ் பிராசா மற்றும் வீரர்கள் எதிர்ப்பு...

ஸ்டைன் வேகத்தில் இந்தியா பரிதாபம்

தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டைன் வேகத்தில், நிலைதடுமாறிய இந்திய அணி, நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் "பாலோ-ஆன்' பெற்றது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கப் போராடி வருகிறது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 6 விக்கெட் இழப்புக்கு 558 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்து இருந்தது....

காவஸ்கரின் சாதனையை சமன் செய்தார் காலிஸ்

நாகபுரி டெஸ்டில் அடித்துள்ள சதம் காலிஸின் 34-வது டெஸ்ட் சதமாகும். இதன் மூலம் இந்திய வீரர் சுநீல் காவஸ்கர், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் லாரா ஆகியோரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கெனவே 34 சதங்களை அடித்துள்ளனர்.டெஸ்டில் அதிக சதம் எடுத்தவர்கள் பட்டியலில் 45 சதங்களுடன் டெண்டுல்கர் முதலிடத்திலும், 39 சதங்களுடன் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 2-வது இடத்திலும் உள்ளனர்.இதுதவிர இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட்டாக அதிக ரன்களை (285) எடுத்த தென் ஆப்பிரிக்க ஜோடி என்ற சாதனையையும் காலிஸ் - ஆம்லா ஜோடி...

முதலிடத்தில் நீடிக்குமா இந்தியா?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் பட்சத்தில் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் தொடர்ந்து "நம்பர்-1' இடத்தில் நீடிக்கலாம். தவிர, ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணிக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் விருது மற்றும் பரிசுத் தொகையை தட்டிச் செல்லலாம். டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை கைப்பற்ற இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நடக்கிறது. தற்போது இந்திய அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா இரண்டாவது (120 புள்ளிகள்) இடத்தில் உள்ளது. நேற்று துவங்க உள்ள இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட்...