
ஒருநாள் போட்டிகளில் இந்திய பவுலர்களின் செயல்பாடு படுமோசமாக உள்ளது. சமீபத்திய 20 போட்டிகளில் 250 அல்லது அதற்கு மேலான ரன்களை வாரி வழங்கியுள்ளனர்.
கடந்த 2011ல் நடந்த உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. தொடர்ந்து சொந்தமண்ணில் நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை கைப்பற்றியது.
அதேநேரம், அன்னிய மண்ணில் பங்கேற்ற இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து...