சரியாக கணித்த சேவக்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்கும் திறமை என்னிடம் உள்ளது என இந்திய வீரர் சேவக் கணித்தார்,'' என, ஆஸ்திரேலியாவின் வார்னர் கூறினார்.ஆஸ்திரேலியா சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி, பிரிஸ்பேனில் நாளை துவங்குகிறது. முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில், ஷேன் வாட்சனுக்குப் பதிலாக இளம் வீரர் டேவிட் வார்னர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வார்னர் கூறியது:டெஸ்ட் தொடருக்கான அணியில்...

அஷ்வினுக்கு விருது

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் அஷ்வினுக்கு, திலீப் சர்தேசாய் விருது வழங்கப்படுகிறது.சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில், முதன் முதலாக வாய்ப்பு பெற்றவர் அஷ்வின், 25. இதில் 22 விக்கெட் கைப்பற்றிய இவர், பேட்டிங்கில் ஒரு சதம் உட்பட 121 ரன்கள் எடுத்து, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில்,"" வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய அஷ்வினுக்கு, 2011-12ம் ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் மற்றும்...

யுவராஜுக்கு என்ன பிரச்னை?

யுவராஜ் சிங் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இருமலும் வாந்தியும் தொடர்ந்து இருந்தது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் "கேன்சர்' என்று டாக்டர்கள் தெரிவித்த போது, அதிர்ந்து போனோம். ஆனாலும், வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்காத யுவராஜ், மிக விரைவில் மீண்டான்,''என, தாயார் ஷப்னம் சிங் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ். சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில், நமது அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக...

ஹர்பஜனுக்கு மீண்டும் கைவிரிப்பு

ஆஸ்திரேலியா செல்லும் டெஸ்ட் அணியில் ஹர்பஜனுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ரோகித் சர்மாவுடன் ஜாகிர் கான், பிரவீண் குமாரும் இந்திய அணியில் இடம் பெற்றனர்.வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி நான்கு டெஸ்ட், இரண்டு "டுவென்டி-20' மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இலங்கை பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் டிச., 26ம் தேதி, மெல்போர்னில் துவங்குகிறது. அடுத்த மூன்று போட்டிகள் சிட்னி (2012, ஜன., 3-7), பெர்த்...

சச்சின், தோனிக்கு ஓய்வு * சேவக் கேப்டன்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், சச்சின், தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சேவக் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வரும் 29ம் தேதி கட்டாக்கில் நடக்கிறது. மற்ற போட்டிகள் விசாகபட்டினம் (டிச., 2), ஆமதாபாத் (டிச., 5), இந்தூர் (டிச., 8), சென்னை (டிச., 11) ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது. முதல் மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்களை,...

2-வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தரவரிசையில் இந்திய அணி 117 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கண்ட படுதோல்வியால் முதலிடத்தை இழந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது இந்திய அணி. இந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்றதன் மூலம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோல்வி கண்டதும், இந்திய அணியின் தரவரிசை முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் ஆகும். 2-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க...

பரிசு மழையில் இந்திய கபடி சாம்பியன்கள்

உலக கோப்பை வென்ற இந்திய கபடி வீரர், வீராங்கனைகள் பரிசு மழையில் நனைகின்றனர். ஆண்கள் அணிக்கு ரூ. 2 கோடி பரிசுடன் அரசு வேலையும் காத்திருக்கிறது.பஞ்சாப்பில், ஆண்களுக்கான 2வது உலக கோப்பை கபடி தொடர் நடந்தது. நேற்று முன்தினம் லூதியானாவில் நடந்த பைனலில் இந்தியா, கனடா அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 63-25 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக (2010-11) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 2 கோடி பரிசாக...

லட்சுமணுக்கு தேவை 45 நிமிடங்கள்

ஐந்தாவது வீரராக களமிறங்குவது லட்சுமணுக்கு சாதகம். பூஜைகளை முடித்து விட்டு "பேட்டிங்கிற்கு' தயாராக நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்,''என, சேவக் தெரிவித்துள்ளார்.மும்பையில் "சியட்' சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா நடந்தது. இதில், இங்கிலாந்தின் டிராட்(சிறந்த வீரர்+பேட்ஸ்மேன்), இந்தியாவின் கோஹ்லி(இளம் வீரர்), ரெய்னா("டுவென்டி-20' வீரர்), வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வால்ஷ்(வாழ்நாள் சாதனையாளர்) உள்ளிட்டோர் விருதுகள் பெற்றனர். தவிர, லட்சுமண்(இந்திய...

நூறாவது சதத்துக்கு, 100 தங்க காசுகள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், சச்சின் தனது 100வது சதத்தை அடித்தால், மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) சார்பில் 100 தங்க காசுகள் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், இதுவரை 48 ஒருநாள், 51 டெஸ்ட் என, மொத்தம் 99 சதம் அடித்துள்ளார். கடைசியாக கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில், சதம் அடித்தார்....

காம்ப்ளி கருத்து - பி.சி.சி.ஐ., எதிர்ப்பு

உலக கோப்பை போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்ற காம்ப்ளியின் கருத்து முட்டாள்தனமானது. இதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.கடந்த 1996ல் உலக கோப்பை தொடர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கையில் நடந்தது. இத்தொடரில் கோல்கட்டாவில் நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் விளையாடிய இலங்கை அணி, 50 ஓவரில் 251/8 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி 98 ரன்னுக்கு...

சதத்தில் அரைசதம்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' இன்னும் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில், "சதத்தில் சதம்' கடந்து சாதிக்கலாம். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சதம் அடித்துள்ள வீரர்கள் வரிசையில் சச்சின் (99 சதம்) உள்ளார். இவர், டெஸ்டில் 51, ஒருநாள் போட்டியில் 48 சதம் அடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக உள்ள ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், மொத்தம் 69 சதம் அடித்துள்ளார். இவர், டெஸ்டில் 39, ஒருநாள் போட்டியில் 30 சதம் அடித்துள்ளார். 17 சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் விளையாடிய...

இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடிய டேரன் பிராவோவின் சதம் வீணானது.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது டெஸ்ட் கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.முதல் இன்னிங்சில் லட்சுமண் (176*), தோனி...

லட்சுமண், தோனி சதம் - வலுவான நிலையில் இந்தியா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில், லட்சுமண், கேப்டன் தோனி சதம் அடித்து தூள் கிளப்ப, இந்திய அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.டிராவிட் (119) சதம் அடித்து கைகொடுக்க, முதல் நாள்...

100வது சதத்தை மீண்டும் நழுவவிட்டார் சச்சின்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 38 ரன்களுக்கு அவுட்டான இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் "சதத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை நழுவவிட்டார்.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று...

சுழல் ஆதிக்கம் கோல்கட்டாவில் தொடருமா?

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட், நாளை கோல்கட்டாவில் துவங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியை போல, இங்கும் இந்திய அணியின் சுழல் ஆதிக்கம் தொடருமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.இந்த போட்டியில் பிரக்யான் ஓஜா, ஹர்பஜனுக்குப் பதில் வாய்ப்பு பெற்ற அஷ்வின் இருவரும்...

கோல்கட்டாவில் இந்திய வீரர்கள்

இரண்டாவது டெஸ்டில் பங்கேற்பதற்காக, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நேற்று கோல்கட்டா வந்தனர்.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் டெஸ்டில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், வரும் 14ம் தேதி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.சச்சின் வரவில்லை:இதற்காக இந்தியா...

ஹர்பஜனுக்கு மீண்டும் கல்தா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணியில் மாற்றம் இல்லை. "சீனியர்' வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு, மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இப்போட்டியில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனுக்கு பதிலாக, அஷ்வின், பிரக்யான் ஓஜா இடம் பெற்றனர். முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தினார் ஓஜா. அஷ்வின்...

அஸ்வின் 13-ந்தேதி திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரராக திகழ்பவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த அவர் தனது அறிமுக டெஸ்டிலேயே சிறப்பாக பந்து வீசினார். இந்த நிலையில் அஸ்வின் திருமணம் செய்ய உள்ளார். 25 வயதான அவர் தனது பள்ளி தோழி பிரீத்தியை மணக்கிறார். இந்த திருமணம் வருகிற 13-ந்தேதி கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடக்கிறது. உறவினர்கள், குடும்ப நண்பர்கள் ஆகியோருக்கு மட்டுமே திருமண அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்கு மறுநாள் (14-ந்தேதி) இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் தொடங்குகிறது. திருமணம் முடிந்தவுடன்...

ஈடன் கார்டனில் 100வது சதம்

சச்சின் தனது 100 வது சதத்தை, பாரம்பரியமிக்க கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் எட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில், இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 99வது சர்வதேச சதத்தை (48 ஒருநாள்+51 டெஸ்ட்) அடித்தார். அதன் பின் "சதத்தில் சதம்' என்ற சாதனையை படைக்க இவர் எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து...

சச்சின் 15,000 ரன்கள் கடந்து சூப்பர் சாதனை

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் இன்னொரு சாதனை படைத்தார். டெஸ்ட் வரலாற்றில் 15 ஆயிரம் ரன்களை எட்டிய உலகின் முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டில்லி டெஸ்டில், நேற்று 33 ரன்கள் எடுத்த சச்சின், 28வது ரன்னை கடந்த போது இச்சாதனை படைத்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் முடிசூடா மன்னனாக நீடிக்கிறார். இதுவரை இவர், 182 டெஸ்டில் பங்கேற்று 51 சதம், 61 அரைசதம் உட்பட 15,005 ரன்கள்...

நூறு டெஸ்ட் - சேவக் இலக்கு

டெஸ்ட் அரங்கில், நூறு போட்டிகளுக்கு மேல் விளையாட வேண்டும்,'' என, இந்திய அணியின் துவக்க வீரர் சேவக் விருப்பம் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். டில்லியை சேர்ந்த இவர், கடந்த 2001ல் (செப்., 3-6) புளோயம்போன்டைன் நகரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். முதல் டெஸ்டில் சதம் அடித்து முத்திரை பதித்த இவர், இதுவரை 89 டெஸ்ட் (7735 ரன்கள்), 236 ஒருநாள் (7760 ரன்கள்), 14 சர்வதேச "டுவென்டி-20' (313 ரன்கள்) போட்டிகளில்...

தெண்டுல்கர் 100-வது சதம் அடிப்பாரா?

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சச்சின் தெண்டுல்கர். சர்வதேச போட்டிகளில் 100-வது சதத்துக்காக அவர் ஏங்கி இருக்கிறார். அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 99 சதம் (டெஸ்ட் 51+ ஒருநாள் போட்டி 48) அடித்துள்ளார்.உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மார்ச் 12-ந்தேதி அவர் சதம் அடித்தார். அதற்கு பிறகு தெண்டுல்கர் சதம் அடிக்கவில்லை. உலக கோப்பையிலேயே தனது 100-வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தவறவிட்டார்....

சச்சின் சாதனை சதம்

டில்லி டெஸ்டில் சச்சின் தனது நூறாவது சதத்தை அடித்து, சாதனை படைப்பார் என்று நம்பிக்கை உள்ளது. சர்வதேச டெஸ்ட் அரங்கில் மீண்டும் முதலிடத்தை பெறுவதற்கான முயற்சியை துவங்கி விட்டோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், இன்று துவங்குகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில், இத்தொடரில்...