சச்சின் சாதனையை நெருங்கும் குக்இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினின் சாதனையை முறியடிப்பார்,'' என, "ஆல்-ரவுண்டர்' கெவின் பீட்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (198 டெஸ்ட், 15837 ரன்கள், 51 சதம், 67 அரைசதம்), டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார். 

இவரை விட, 8313 ரன்கள் குறைவாக இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக் (92 டெஸ்ட், 7524 ரன்கள், 25 சதம், 29 அரைசதம்) உள்ளார். சச்சினின் இந்த சாதனையை அலெஸ்டர் குக் விரைவில் முறியடிப்பார் என இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

பீட்டர்சன் கூறியது: இங்கிலாந்து அணியை அலெஸ்டர் குக் சிறப்பாக வழிநடத்துகிறார். இவர், சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய சாதனைகள் படைப்பார் என நம்புகிறேன். 

குறிப்பாக இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினின் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர், முதன்முதலில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியை சிறப்பாக வழிநடத்திய இவர், அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

இளம் வீரர் ஜோ ரூட் அருமையாக பேட்டிங் செய்கிறார். இந்தியாவுக்கு எதிராக அறிமுக வீரராக களமிறங்கிய போது, சிறந்த வீரராக வலம் வருவார் என நினைத்தேன். அதற்கேற்ப அசத்தி வருகிறார்.

இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.

0 comments:

Post a Comment