சச்சினை மறக்க செய்த தவான்சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஷிகர் தவானை பற்றி தான் அனைவரும் பேசினர். சச்சின், சேவக் இல்லாததை ரசிகர்கள் உணரவில்லை,'' என, கபில்தேவ் தெரிவித்தார். 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்தியாவின் ஷிகர் தவான், ஒரு நாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கூறியது: 

இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக ஷிகர் தவான் திகழ்கிறார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக துணிச்சலாக ஆடினார். 

துவக்க வீரராக ரோகித் ஆட்டமும் சிறப்பாக இருந்தது. இதனால், நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. தற்போது, இந்திய அணி இளம் வீரர்களின் வசம் சென்று விட்டது.

அணியில் சச்சின், சேவக் இல்லை என்பதை என்னால் உணர முடியவில்லை. அந்தளவுக்கு, தவானின் ஆட்டம் இருந்தது. 

தவிர, ரசிகர்களும் இவரை பற்றி மட்டுமே பேசினர். மற்ற வீரர்களைப்பற்றி பேசுவதில்லை. 

இவ்வாறு கபில்தேவ் கூறினார். 

0 comments:

Post a Comment