ஸ்ரீசாந்துக்கு மேலும் சிக்கல் - பாயப்போகிறது புதிய வழக்குகிரிக்கெட் சூதாட்டத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீலுக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், ஸ்ரீசாந்த், சண்டி, அங்கித் சவான் மீது ஜாமினில் வெளி வர முடியாத புதிய வழக்கு பதியப்பட உள்ளது. 

ஆறாவது பிரிமியர் தொடரில், "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட 25 பேர், டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணத்துக்காக ஜாமினில் சென்ற அங்கித் சவான், இன்று சிறைக்கு திரும்ப உள்ளார்.

இதனிடையே, ஸ்ரீசாந்த், சண்டிலா ஆகியோரது நீதிமன்ற காவல் முடிந்து, நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது இருவரது ஜாமின் மனு மீதான விசாரணையும் நடந்தது. ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோரின் ஜாமின் மனுக்களை நிராகரித்த நீதிபதி, ஜூன் 18 ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். 

இதனிடையே, ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் மீதும், மகாராஷ்டிரா கன்ட்ரோல் ஆப் ஆர்கனைஸ்டு கிரைம் (எம்.சி.ஓ.சி.ஏ.,) சட்டத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. 

சட்ட விரோதமாக பயங்கரவாதத்துக்கு பணம் செல்வதை தடுக்க, 1994ல் இந்த சட்டம் மகாராஷ்டிராவில் கொண்டு வரப்பட்டது. 


பயங்கரவாத தொடர்பு:

புக்கிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நிழல் <உலக தாதாக்கள் சோட்டா ஷகீல், தாவூத் இப்ராகிம் உடன் தொடர்புள்ளது அம்பலமானது. இதற்கான ஆதாரங்கள் போலீசிடம் உள்ளதாக தெரிகிறது.

இதனால், ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் மீது, ஜாமினில் வெளிவர முடியாத, எம்.சி.ஓ.சி.ஏ., சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது.


ஜாமின் இல்லை

இதன் படி, தொடர்ந்து 30 நாட்கள் கூட போலீஸ் காவலில் வைத்திருக்க முடியும். ஜாமின் கிடைக்காது. இவர்கள் தொடர்பான வழக்கு தனி நீதிமன்றத்தில் நடக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஸ்ரீசாந்த் வக்கீல் ரெபெக்கா ஜான் கூறுகையில்,"" ஸ்ரீசாந்த்துக்கு ஜாமின் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே, கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்கின்றனர்,'' என்றார். இதனிடையே, ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த புதிய ஜாமின் மனு, ஜூன் 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

0 comments:

Post a Comment