ஜாகிர், ஸ்ரீசாந்த் அதிரடி நீக்கம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர்கள் ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா,வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. முதல் டெஸ்ட் வரும் ஜூன் 20ம் தேதி ஜமைக்காவில் துவங்குகிறது.


மிதுன், பிரவீண் வாய்ப்பு:

இத்தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. இதில் காயம் காரணமாக சேவக், யுவராஜ், காம்பிர் இடம் பெறவில்லை. சச்சின் தானாகவே விலகி விட்டார்.
இப்படி முன்னணி வீரர்கள் இடம் பெறாத நிலையில் இந்திய அணிக்கு தற்போது இரட்டை "அடி' விழுந்துள்ளது. வேகப்பந்துவீச்சாளர்களான ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதில் பிரவீண் குமார், அபிமன்யு மிதுன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) வெளியிட்டுள்ள அறிக்கையில்,""வலது கணுக்கால் காயத்தால் ஜாகிர் கான் அவதிப்படுகிறார். ஸ்ரீசாந்துக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்படுகின்றனர். இவர்கள் காயத்தில் இருந்து மீண்டு வர சிறிது காலம் தேவைப்படும். மிதுன், பிரவீண் குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாகிர், ஸ்ரீசாந்த் குணமடைவதற்கு தேவைப்படும் நாட்கள் குறித்து பி.சி.சி.ஐ., விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

இதனால், வரும் ஜூலை 21ல் துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்கள் இடம் பெறுவதும் சந்தேகமாக உள்ளது. ஐ.பி.எல்., முன்னுரிமை:முக்கிய டெஸ்ட் தொடர்களுக்கு முன் ஜாகிர் கான் காயம் அடைவது தொடர்கிறது. சமீபத்திய இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் தோள்பட்டை காரணமாக பங்கேற்கவில்லை.

இதே போல தொடையில் ஏற்பட்ட காயத்தால் வங்கதேச, இலங்கை தொடரில் ஸ்ரீசாந்த் விளையாட வில்லை. ஆனால், ஐ.பி.எல்., தொடரில் இவர்கள் கலந்து கொண்டனர். இது, தேசத்தை காட்டிலும் பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., தொடருக்கு வீரர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர் என்ற சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது.

0 comments:

Post a Comment