பாலி உம்ரிகர் விருது பெற்றார் சச்சின்

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், சிறந்த கிரிக்கெட் வீரருக்கான "பாலி உம்ரிகர்' விருது, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு வழங்கப்பட்டது.

கடந்த 28 ஆண்டுகளுக்குப் பின், உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், பி.சி.சி.ஐ., சார்பில் மும்பையில் பாராட்டு விழா நடந்தது. இத்துடன் கிரிக்கெட்டில் பல்வேறு பிரிவுகளில் சாதித்த வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.


சச்சினுக்கு விருது:

கடந்த 2009-10ம் ஆண்டில் பங்கேற்ற 10 டெஸ்ட் போட்டிகளில், ஒரு இரட்டை சதம், ஐந்து சதம் உட்பட மொத்தம் 1064 ரன்கள், 12 நாள் போட்டிகளில் ஒரு இரட்டைசதம் உட்பட 695 ரன்கள் எடுத்து அசத்திய இந்திய வீரர் சச்சினுக்கு, சிறந்த கிரிக்கெட் வீரருக்கான "பாலி உம்ரிகர்' விருது வழங்கப்பட்டது. இதற்கான கோப்பையுடன், ஐந்து லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

ஜி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது முன்னாள் "ஆல் ரவுண்டர்' சலிம் துரானிக்கு வழங்கப்பட்டது. இவருக்கு கோப்பையுடன், ரூ. 15 லட்சம் கிடைத்தது. இதுதவிர, ரஞ்சித் தொடரில் அதிக ரன்கள் எடுத்த மனிஷ் பாண்டே, அதிக விக்கெட் வீழ்த்திய அபிமன்யு மிதுனுக்கு மாதவராவ் சிந்தியா விருதுகள் வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment