
பார்படாஸ் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். பேட்டிங்கில் லட்சுமண்(85) கைகொடுத்தார்.மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் பார்படாசில் நடக்கிறது. "சூப்பர் ஜோடி:முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும் தொல்லை...