கனவுகள் இல்லாத வாழ்க்கை சுவையற்றது. கனவு காண்பது மிகவும் முக்கியம்,''என, சச்சின் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட் உலகின் சாதனை நாயகனாக திகழ்கிறார் இந்தியாவின் சச்சின் (37). ஒருநாள் (17,598), டெஸ்ட் (14,240) என இரண்டிலும் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டு இவருக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் மற்றும் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்தினார். சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில்,...