
இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினின் சாதனையை முறியடிப்பார்,'' என, "ஆல்-ரவுண்டர்' கெவின் பீட்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (198 டெஸ்ட், 15837 ரன்கள், 51 சதம், 67 அரைசதம்), டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்.
இவரை விட, 8313 ரன்கள் குறைவாக இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக் (92 டெஸ்ட், 7524 ரன்கள், 25 சதம்,...