தள்ளு விவகாரம் தள்ளிவைப்பு

ரவிந்திர ஜடேஜா, ஆண்டர்சன் ‘தள்ளு’ விவகாரம் தொடர்பான விசாரணை, ஆக., 1க்கு தள்ளிவைக்கப்பட்டது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நாட்டிங்காமில் முதல் டெஸ்டில் பங்கேற்றது. 

இப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஜடேஜாவை பிடித்து தள்ளியுள்ளார் ஆண்டர்சன். இதுகுறித்து ஆண்டர்சன் மீது ‘லெவல்–3’, ஜடேஜா மீது ‘லெவல்–2’ ன் கீழ், இருதரப்பிலும் மாறி மாறி புகார் செய்யப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) கமிஷனர் கார்டன் லுாயிஸ் சம்பவம் குறித்து விசாரிக்கிறார். 

நேற்று நடந்த முதற்கட்ட விசாரணையில், இரு நாடுகளின் கிரிக்கெட் போர்டுகள் சார்பில் சட்ட வல்லுனர்கள் குழு ஆஜராகியது.

தற்போது அடுத்த கட்ட விசாரணை, மூன்றாவது டெஸ்ட் முடிந்த மறுநாள் அதாவது, ஆக., 1ல் நடக்கும். ‘வீடியோகான்பரன்சிங்’ முறையில் இரு வீரர்களிடம் விசாரிக்கப்பட்டு, அடுத்த 48 மணி நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படும்.

ஒருவேளை தடை வழங்கப்பட்டால், அதை எப்போது முதல் அமல் படுத்துவது என்பதை லுாயிஸ் முடிவு செய்வார்.

1 comments:

  1. அணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.

    ReplyDelete