அஷ்வின் என்ன குப்பைத்தொட்டியா?

முதல் டெஸ்டில் அஷ்வினை நீக்கியது புரியாத புதிராக உள்ளது. இவரை, ரோட்டின் ஓரத்தில் வைக்கப்படும் குப்பைத்தொட்டியை போல கருதுகின்றனர்,’’ என, மார்ட்டின் குரோவ் தெரிவித்தார்.

நாட்டிங்காமில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் தேர்வு ஏமாற்றம் அளித்தது. அனுபவ சுழற்பந்துவீச்சாளரான தமிழகத்தின் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார். இதன் காரணமாக, இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்தியா திணறியது. 

இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் கூறியது:

டெஸ்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வீரர் அஷ்வின் தான். பின்வரிசை பேட்ஸ்மேனாக சராசரியாக 40 ரன்கள் எடுத்துள்ளார். 

தோனி, கோஹ்லி, புஜாராவுக்கு அடுத்து அஷ்வினை தான் தேர்வு செய்ய வேண்டும். தற்போது, இவரை வெறும் பார்வையாளராக வைத்திருப்பதன் காரணத்தை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். 

இவர் வங்கியின் மானேஜர் போன்றவர். ஆனால், கொள்ளையர் போல நடத்துகின்றனர். இவரை, ரோட்டின் ஓரத்தில் வைக்கப்படும் குப்பைத்தொட்டி போல கருதுகின்றனர். அதே நேரத்தில், ஸ்டூவர்ட் பின்னியை சிறந்த டெஸ்ட் வீரராக போற்றி, அறிமுக வாய்ப்பு அளிக்கின்றனர்.

இங்கிலாந்தை நிலைகுலையச் செய்ய சிறந்த ‘ஸ்பின்னர்’ தேவை. இதற்கு அஷ்வின் தான் முதல் தேர்வாக இருக்க வேண்டும். 

இவரால் 8வது வீரராக பேட் செய்யவும் முடியும். இந்திய டெஸ்ட் வரலாற்றில் ‘ஆல்–ரவுண்டராக’ சாதனை படைத்த இவரை, ஒரு மூலையில் அமரச் செய்திருப்பது புரியாத புதிராக உள்ளது.

இவ்வாறு மார்ட்டின் குரோவ் கூறினார்.

0 comments:

Post a Comment