அசோக் திண்டாவுக்கு சிறந்த கிரிக்கெட் வீரர் விருது

மேற்கு வங்காள மாநில கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு விழா வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் சிறந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் 21 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

மேற்கு வங்காள வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டாவுக்கு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. விக்கெட் கீப்பர் விர்திமான் சகா, ஜென்டில்மேன் வீரருக்கான கோப்பையை பெறுகிறார். முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுமந்திரனாத் குண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெறுகிறார். 

விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஜி.ஆர்.விஸ்வநாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

0 comments:

Post a Comment