
டெஸ்ட் அரங்கில் இருந்து விடை பெற முடிவு செய்துள்ளார் இலங்கை வீரர் ஜெயவர்தனா.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனா, 37. கடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை போட்டியுடன், இந்த கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார்.
கடந்த 1997ல் இந்திய அணிக்கு எதிராக அறிமுகம் ஆன இவர், இதுவரை 145 டெஸ்டில், 11,493 ரன்கள் (33 சதம், 48 அரை சதம்) எடுத்தார்.
இதனிடையே, வரும் தென் ஆப்ரிக்கா (ஜூலை 16–24), பாகிஸ்தான் (ஆக., 6–18) அணிகளுக்கு எதிரான தலா 2 போட்டிகள் கொண்ட தொடருடன், டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் போர்டுக்கு ஜெயர்வர்தனா எழுதிய கடிதத்தில்,‘ கடந்த 18 ஆண்டுகளாக தேசிய அணிக்காக விளையாடியது பெருமையாக உள்ளது.
இந்நிலையில் ஓய்வு பெறுவது என்பது எடுத்த முடிவு அவ்வளவு எளிதானது அல்ல. இருப்பினும், இதற்கு இது தான் சரியான நேரம்,’ என, தெரிவித்துள்ளார்.
அருமை.. தெளிவான பதிவு.. பகிர்வினிற்கு நன்றி..
ReplyDeleteHappy Friendship Day 2014 Images