
பரபரப்பான கொழும்பு டெஸ்ட் போட்டியை டிரா செய்த தென் ஆப்ரிக்க அணி, தொடரை 1–0 என கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் மீண்டும் நம்பர்–1 இடத்தை பெற்றது. இலங்கை அணியின் போராட்டம் வீணானது.
இலங்கை சென்ற தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்கா 1–0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 421, தென் ஆப்ரிக்கா 282 ரன்கள்...