ஹேப்பி பர்த்டே சச்சின்

இந்திய அணியின் சாதனை நாயகன் சச்சின் இன்னொரு மைல்கல்லை எட்டுகிறார். இன்று தனது 38வது பிறந்தநாளில் காலடி எடுத்து வைக்கிறார். உலக கோப்பை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இவருக்கு, ரசிகர்கள் மனதார வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (38). கடந்த 1973, ஏப். 24ம் தேதி மும்பையில் பிறந்த இவர், பள்ளிப் பருவத்திலேயே கிரிக்கெட் போட்டிகளில் சாதித்தார். 1988ல் பள்ளி அளவிலான போட்டியில் காம்ப்ளியுடன் இணைந்து 664 ரன்கள் குவித்தார்.

தனது 16வது வயதில் இந்திய அணியில் அறிமுகமான இவர், எண்ணற்ற சாதனைகளை படைத்தார். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், அதிக சதம் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார்.

பகுதி நேர பந்துவீச்சாளராகவும் அசத்தி வருகிறார். சர்வதேச "டுவென்டி-20' போட்டிகளில் இருந்து விலகிய இவர் , ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.

கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் இவருக்கு இம்முறை உலக கோப்பை வென்றது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. இது குறித்து சச்சின் கூறுகையில்,""உலக கோப்பையை கையில் தாங்கிய அந்த தருணம், வாழ்நாளில் மறக்க முடியாது,'' என, தெரிவித்து இருந்தார்.


சதத்தில் சதம்:

தற்போதைய ஐ.பி.எல்., தொடரில், இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 4ல் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சச்சினின் அணி. இன்றைய போட்டியில் சச்சின் அணி, டெக்கானை சந்திக்கிறது. இதனால் சச்சின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவாரா என்று சரியாகத் தெரியவில்லை.

உலக கோப்பை கனவு நிறைவேறிய உற்சாகத்தில் உள்ள சச்சின், தனது 38 வது வயதில், மேலும் ஒரு சர்வதேச சதம் அடித்து, மொத்தம் 100 சதம் அடித்தவர் என்ற பெருமை பெறுவார் என்று நம்பப்படுகிறது.



ராணுவ வீரர்களுடன்...
கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் "வீல்-சேரில்' அமர்ந்தவாறு புனேயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் "வீடியோ கான்பரன்சிங்' மூலம் உரையாடிய சச்சின் கூறுகையில்,""போட்டிகளில் இறுதி வரை போராட வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்,''என்றார்.

பின் வீரர்களுக்காக "வீடியோ கான்பிரன்சிங்' மூலமாகவே "கேக்' வெட்டி தனது பிறந்தநாளை முன்னதாகவே கொண்டாடினார்.

1 comments:

  1. ஹாப்பி பர்த்டே சச்சின்
    எனது வலைத்தளத்தில்
    YOU TUBE தளத்தில் இருந்து ஆடியோ வினை மட்டும் தரவிறக்கம் செய்ய
    http://mahaa-mahan.blogspot.com/

    ReplyDelete