20 ஆண்டுகளாக கிரிக்கெட் சூதாட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியில் கடந்த பல ஆண்டு காலமாக சூதாட்டம் இருந்து வருகிறது என்றும் இது புற்றுநோய் போல பரவி வருவதாகவும் இலங்கை முன்னாள் கேப்டன் ஹசன்திலகரத்னே கூறியிருக்கிறார். இலங்கை அணியில் ஆடியபோது வாய்திறக்காத திலகரத்னே இப்போது வாய்திறந்திருக்கிறார். மேட்ச் பிக்ஸிங்கை இப்போது நிறுத்தாவிட்டால், பாகிஸ்தான் கதி தான் இலங்கைக்கு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.இது குறித்து ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:கிரிக்கெட்டில்...

சேவக்கை வீழ்த்த திட்டம் தயார்

கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில், சேவக்கை வீழ்த்த தேவையான திட்டங்களுடன் தயாராக உள்ளோம்,'' என, கோல்கட்டா அணியின் பயிற்சியாளர் வாட்மோர் தெரிவித்துள்ளார்.நான்காவது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் தலா 3 வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அதிக ரன்கள் எடுத்தும், கெய்ல் புயலில் சிக்கி வீழ்ந்தது. அடுத்து வரும் 28ம் தேதி நடக்கும் போட்டியில் டில்லி அணியை எதிர்கொள்கிறது. இதுகுறித்து...

ஹேப்பி பர்த்டே சச்சின்

இந்திய அணியின் சாதனை நாயகன் சச்சின் இன்னொரு மைல்கல்லை எட்டுகிறார். இன்று தனது 38வது பிறந்தநாளில் காலடி எடுத்து வைக்கிறார். உலக கோப்பை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இவருக்கு, ரசிகர்கள் மனதார வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்திய கிரிக்கெட் அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (38). கடந்த 1973, ஏப். 24ம் தேதி மும்பையில் பிறந்த இவர், பள்ளிப் பருவத்திலேயே கிரிக்கெட் போட்டிகளில் சாதித்தார். 1988ல் பள்ளி அளவிலான போட்டியில் காம்ப்ளியுடன் இணைந்து 664 ரன்கள் குவித்தார்....

கிறிஸ் கெய்ல் "333'

ஐ.பி.எல்., போட்டிகளில் பெங்களூரு அணி சார்பில் விளையாடிவரும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், 333 ம் எண் கொண்ட "ஜெர்சி' அணிந்து பங்கேற்று வருகிறார்.வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி துவக்க வீரர் கிறிஸ் கெய்ல். கடந்த மூன்று தொடர்களில் கோல்கட்டா அணி சார்பில் பங்கேற்ற இவரை, நான்காவது ஐ.பி.எல்., தொடரில், எந்த அணி நிர்வாகமும் தேர்வு செய்யவில்லை. தவிர, மோசமான பார்ம், உடற் தகுதியின்மையை காரணம் காட்டி, தற்போது சொந்த மண்ணில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான...

வேகத்தில் சாதிக்க தயார்

உலக கோப்பை தொடரின் போது காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார், காயத்திலிருந்து மீண்டு நான்காவது ஐ.பி.எல்., தொடருக்காக முழு அளவில் தயாராகியுள்ளார். இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார். உலககோப்பை அணியில் இடம் பெற்றிருந்த இவர், முழங்கை காயம் காரணமாக கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த இவர், தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப்...

வீரர்கள் வேண்டுகோளை ஏற்க முடியாது

உலக கோப்பை வென்றதால் ரூ. 5 கோடி பரிசு தரவேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேண்டுகோளை ஏற்க முடியாது,' என, பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.பத்தாவது உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 15 வீரர்களுக்கும், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ரூ. 1 கோடி பரிசு வழங்கியது. இது தங்களுக்கு போதாது என்று வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது. இதுகுறித்து ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியில், பெயர் குறிப்பிட விரும்பாத முன்னணி வீரர் ஒருவர்...

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சந்தேகமே!

இந்த ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளிடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவது சந்தேகம்தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த ஆண்டில் இரு அணிகளும் சர்வதேச அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் போட்டியை நடத்தும் வாய்ப்பு குறைவு. இருப்பினும் இரு நாட்டு அரசுகளும் முயற்சி எடுக்கும் பட்சத்தில், பொதுவான இடத்தில் வைத்து போட்டியை நடத்துவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.ஜாகீர் அப்பாஸ்: இரு நாட்டு அரசுகளும் விரும்பினால்...

இந்த ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.அதனால் இந்த ஆண்டு இவ்விரு அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெறக் கூடும் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன்பிறகு பாகிஸ்தானுடன், இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில்லை என முடிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்த...

15 சிக்ஸர்கள் வாட்சன் சாதனை

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 15 சிக்ஸர்களை விளாசி ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் உலக சாதனை படைத்தார். இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகளின் சேவியர் மார்ஷல் அதிகபட்சமாக ஒருநாள் ஆட்டத்தில் 12 சிக்ஸர்கள் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அவர் கனடாவுக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்தார். மார்ஷலின் சாதனையை மிர்பூரில் திங்கள்கிழமை வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வாட்சன் முறியடித்தார். இது தவிர ஒருநாள் கிரிக்கெட்டில் தனிப்பட்ட...

சச்சின் ஆட்டம் வியப்பளிக்கிறது

வயது கூடிக் கொண்டே சென்றாலும், கடந்த இரு ஆண்டுகளாக சச்சின் சிறப்பாக ஆடி வருவதை நம்பமுடியவில்லை என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார்.லண்டனில் இந்திய பத்திரிகையாளர்களிடம் அவர் இதுகுறித்து வியாழக்கிழமை கூறியது: வயது கூடிக்கொண்ட சென்றாலும்கூட, சச்சின் சாம்பியனைப் போன்றே விளையாடி வருகிறார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு எனது பாராட்டுகள். இந்திய அணி உலகின் எந்த அணியையையும் வெல்லக்கூடிய திறமைபடைத்த அணி. இருப்பினும் அவர்கள் முழுத்திறமையை...

பைனலுக்கு செல்வது எப்படி?

நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும், தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. இதன் பின் அரையிறுதி போட்டியில் பங்கேற்காமல், பைனலுக்கு செல்வது எப்படி என்ற விபரத்தை இங்கே காணலாம்.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 2010 தொடரில் இருந்த 8 அணிகளின் எண்ணிக்கையுடன் கூடுதலாக, இரண்டு அணிகள் இம்முறை பங்கேற்கின்றன. இதன்படி கொச்சி மற்றும் புனே அணிகளை சேர்த்து, மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த அணிகள் அனைத்தும்,...

பாரத ரத்னா சச்சின்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு இன்னும் "பாரத ரத்னா' விருது வழங்கப்படவில்லை. இருப்பினும் ஏற்கனவே இவர், இந்தியர்களின் "பாரத ரத்னா'வாக விளங்குகிறார்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டியுள்ளார்.பத்தாவது உலக கோப்பை தொடரில், தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதன்மூலம் ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்ற சச்சினின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது. இம்முறை பேட்டிங்கில் அசத்திய இவர், இந்திய...

போலி உலக கோப்பையா? ஐ.சி.சி., விளக்கம்

உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, வழங்கப்பட்ட கோப்பை உண்மையானது தான். இது போலி என்ற பேச்சிற்கே இடமில்லை,' என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), தெரிவித்துள்ளது.பத்தாவது உலக கோப்பை தொடரில் இந்திய அணி உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. பைனலில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்டது உண்மையான கோப்பை அல்ல என, செய்திகள் வெளியாகியுள்ளன.இதனிடையே, இலங்கை, நியூசிலாந்து அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியின் போது, கொழும்புவில் ரசிகர்கள்...

இந்திய ஹீரோக்கள் பெற்றது ஒரிஜினல் உலகக்கோப்பையா?

28 ஆண்டு கால தவத்திற்கு பின் 120 கோடி மக்கள் கனவு ஏப்ரல் 2ம் தேதியன்று நனவானது. இலங்கையை வீழ்த்தி இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. தங்கள் வெற்றிக் களிப்பை, கைகளில் உலகக்கோப்பையை ஏந்தியபடி மைதானத்தை சுற்றி வந்து கொண்டாடினர் இந்திய வீரர்கள். ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல் தற்போது ஒரு பூதாகர சர்ச்சை கிளம்பியுள்ளது. அது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உலகக்கோப்பை ஒரிஜினல் தானா என்பது.பிரச்னை : உலககோப்பையை இந்தியா கொண்டு வர முறையான வரி செலுத்தாதால்...

28 ஆண்டுகளுக்குப் பின்...

கேப்டன் தோனி இமாலய சிக்சர் அடிக்க...இந்திய அணி உலக கோப்பையை "சூப்பராக' கைப்பற்றி, வரலாறு படைத்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தோனி (91*) மற்றும் காம்பிரின் (97) அபார ஆட்டம், கோப்பை கனவுக்கு கைகொடுத்தது.உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடந்தது. நேற்று மும்பையில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. ஸ்ரீசாந்த் வாய்ப்பு:இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட முரளிதரன்...

இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை

பைனல் குறித்து வெளியாகும் பரபரப்பான தகவல்களில் இருந்து, சக வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான போட்டியில், சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.பத்தாவது உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடக்கும் பைனலில் ஆசிய அணிகளான இந்தியா, இலங்கை மோதுகின்றன.இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:உலக கோப்பை அட்டவணை, உண்மையில் நமக்கு பெரும் உதவியாக இருந்தது. கிடைக்கும் ஓய்வை...