சச்சின் புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை எட்டினார் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் போட்டியில் அவரது 47-வது சதம் இது.இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர்கள் ரிக்கி பாண்டிங், மார்க் வாஹ், இந்தியாவின் கங்குலி ஆகியோர் 4 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர். இவர்களில் மார்க் வாஹ், கங்குலி ஆகியோர் ஓய்வுபெற்றுவிட்டனர்.6-வது உலகக் கோப்பையில் விளையாடும் சச்சின், அதிக சதம் மட்டுமின்றி, அதிக...

அடுத்த டிராவிட் - விராத் கோஹ்லி

ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் விராத் கோஹ்லி, இந்தியாவின் அடுத்த டிராவிட்டாக ஜொலிக்கிறார்.இந்திய அணியின் இளம் "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி (22). 19 வயதுக்குட்பட்டவர்கள் உலக கோப்பை தொடரை இந்திய அணிக்காக வென்று தந்தவர். கடந்த 2008ல் இலங்கை சென்ற அணியில் சேவக் காயம் காரணமாக திரும்ப, விராத் கோஹ்லிக்கு முதன் முறையாக வாய்ப்பு கிடைத்தது. இதில் 5 போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட 159 ரன்கள் எடுத்தார். பின் 2009ல்...

இடது கை பேட்ஸ்மேனான சச்சின்

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இடது கை பேட்ஸ்மேனாக களமிறங்கி 7 சிக்ஸர்களை விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதற்காக பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட சச்சின், திடீரென்று இடது கை பேட்ஸ்மேனானார். கையில் உறை கூட அணியாமல் விளையாடிய சச்சின், முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார். மொத்தம்...

இவர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பை

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளிலுள்ள சில முக்கிய வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கப் போகிறது.உதாரணமாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், இலங்கையின் முத்தையா முரளீதரன், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோரைச் சொல்லலாம். இந்த உலகக் கோப்பை போட்டிதான் எனக்கு கடைசி என்று ஏற்கெனவே முரளீதரன் அறிவித்துவிட்டார். இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கும்...

ஒரு சிக்சருக்கு ரூ. 25 ஆயிரம்

உலக கோப்பை போட்டிகளில் "சிக்சர்கள்' பறக்கும் போது, ரசிகர்கள் மட்டுமல்ல வசதியற்ற குழந்தைகளும் மகிழ்ச்சி அடையலாம். இம்முறை ஒவ்வொரு சிக்சருக்கும் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான நிதி, ஏழை குழந்தைகளின் கல்விக்காக அளிக்கப்பட உள்ளது.இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில், வீரர்கள் "சிக்சர்கள்' அடிக்கும் போதெல்லாம், ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டும். இம்மகிழ்ச்சியை நல்ல காரியத்துக்கு...

பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி இந்தியா

இந்திய மைதானங்கள் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி,'' என, இலங்கை வீரர் திலன் சமரவீரா கருத்து தெரிவித்துள்ளார்.இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகளில், பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இன்று அம்பாந்தோட்டையில் நடக்கும் போட்டியில் இலங்கை, கனடா அணிகள் மோதுகின்றன.உலக கோப்பை தொடர் குறித்து, இலங்கை வீரர் திலன் சமரவீரா கூறியதாவது: உலக கோப்பை தொடர் இந்திய துணைக் கண்டங்களில் உள்ள மைதானங்களில் நடப்பதால், ஒவ்வொரு போட்டியிலும் சுலமாக 300 ரன்களை எட்டிவிடலாம் என நிறைய பேர் கருத்து தெரிவித்தனர். ஆனால் இலங்கை, வங்கதேச மைதானங்களை விட இந்திய மைதானங்களில்...

உலகக் கோப்பை : அணிகளின் பலம், பலவீனம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம்வாய்ந்த அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் கணிக்கப்பட்டுள்ளன. அணியின் பலம், பலவீனம், சிறப்பு குறித்து ஓர் அலசல்.ஆஸ்திரேலியாபலம்: பேட்டிங்தான் ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில், அதாவது அதிகமாக ரன்களை எடுத்துக் குவிக்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்த அணி. இளம் வீரர்கள் அதிகம் உள்ளது கூடுதல் பலம். எந்த சூழ்நிலையிலும் சமாளித்து விளையாடி ஆட்டத்தின் போக்கையே...

உலகக் கோப்பை : அதிர்ச்சி தோல்விகள் - 2

2003 உலகக் கோப்பையில் பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கையை எதிர்கொண்டது கென்யா.இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கென்ய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஒட்டியனோ 60 ரன்கள் விளாச அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை. தொடக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அட்டப்பட்டு 23 ரன்களும், திலகரத்னே 23...

உலக கோப்பை கவுன்ட் டவுண்-2 மறக்க முடியுமா..

உலக கோப்பை அரங்கில், சாதனை வீரராக ஜொலிக்கிறார் இந்தியாவின் சவுரவ் கங்குலி. "டுவென்டி-20' போட்டிகள் அறிமுகமாவதற்கு முன்பே இமாலய "சிக்சர்'கள் அடித்து, ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார். 2003ல் அணியை பைனலுக்கு அழைத்துச் சென்ற இவர், வெற்றி கேப்டனாக பிரகாசித்தார்.கோல்கட்டா "தாதா' என்று செல்லமாக அழைக்கப்படும் கங்குலி, 1999ல் நடந்த உலக கோப்பை தொடரில் முதன் முறையாக பங்கேற்றார். இத்தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா மற்றும் ஜிம்பாப்வேயிடம்...

உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிர்ச்சித் தோல்விகள்

1992 உலகக் கோப்பையில் மார்ச் 18-ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது இங்கிலாந்து. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கிரகாம் கூச் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.இங்கிலாந்தின் இயன் போத்தம், ரிச்சர்டு இல்லிங்வொர்த் ஆகியோரின் அதிரடி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.அந்த அணியின் கேப்டன் டேவ் ஹட்டன் 29 ரன்களும், குட்சர்ட் 24 ரன்களும் எடுத்தனர். இதனால்...

11 பேர் அணியில் இடம் பெறுவது யார்?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதே தற்போது அதிக எதிர்பார்ப்பாக உள்ளது. தொடக்க வீரர்களான தெண்டுல்கரும், ஷேவாக்கும் களம் இறங்குவார்கள். 3-வது வீரராக காம்பீரும், 4-வது வீரராக யுவராஜ்சிங்கும், 5-வது வீரராக கேப்டன் டோனியும் களம் இறங்குவார்கள். 6-வது 7-வது வீரருக்கு போட்டி உள்ளது. வீராட் கோக்லி, சுரேஷ் ரெய்னா, யூசுப்பதான் ஆகியோர் இந்த வரிசையில் இடம்பெறுவார்கள். இதில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு...

இலங்கை கோப்பை வெல்ல வேண்டாம்

ஒவ்வொரு அணியும் கோப்பை வெல்ல வேண்டும் என, அந்தந்த தேசத்தின் பத்திரிகைகள் வாழ்த்துகின்றன. ஆனால், இலங்கை அணி கோப்பை வெல்ல வெல்ல வேண்டாம் என்று, அந்நாட்டு பத்திரிகை ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள விளையாட்டு நிர்வாகங்களில் மிகவும் பணக்கார அமைப்பாக இருப்பது இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி.,). இதன் தலைவராக டி சில்வா இருந்து வருகிறார். எஸ்.எல்.சி.,யில் நிர்வாகிகள் தேர்தல் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து இலங்கையின்...

சச்சினுக்காக உலக கோப்பை - ஸ்டீவ் வாக் எதிர்ப்பு

சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது இந்திய அணியின் தவறான அணுகுமுறை. தனிப்பட்ட நபருக்காக அல்லாமல் நாட்டு மக்களுக்காக கோப்பை வெல்ல வேண்டும்'' என, ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணிக்கு 1999ல் உலக கோப்பை வென்று தந்தவர் ஸ்டீவ் வாக். தற்போதைய தொடரில், சச்சினுக்காக கோப்பை வெல்ல வேண்டும் என அனைத்து இந்திய வீரர்களும் விருப்பம் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறியது:எந்த ஒரு தனிநபரையும் விட விளையாட்டு என்பது பெரியது. தேசிய அணியில்...

ஒரு லட்சம் ரன்கள்

இதுவரை நடந்துள்ள ஒன்பது உலக கோப்பை தொடரில், மொத்தம் 303 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 27616.4 ஓவர்கள் வீசப்பட்டு 1,24,967 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. தவிர, 4247 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது.இதுவரை நடந்த உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட ரன், விக்கெட் விபரம்:ஆண்டு போட்டி ரன் விக்கெட்1975 15 6162 2081979 14 5168 2021983 27 12046 4081987 27 12522 3851992 39 15107 5141996 36 15225 4741999...

தொடர்ந்து விளையாடுவேன் - கங்குலி பல்டி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெற்றுள்ளேன். உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்., தொடரில் தொடர்ந்து விளையாடுவேன்,'' என, கங்குலி திடீரென தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி (38). கடந்த 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், இந்தியாவில் நடக்கும் முதல் தர போட்டிகளில் பங்கேற்று வந்தார். பின், ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில், "கோல்கட்டா நைட் ரைடர்ஸ்' அணியில் இடம் பிடித்து, கேப்டனாக செயல்பட்டார். மூன்று ஐ.பி.எல்.,...

சேவாக், யூசுப் வெற்றியை தீர்மானிக்கக் கூடியவர்கள்

இந்திய வீரர்கள் சேவாக், யூசுப் பதான் ஆகியோர் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய முக்கியமான வீரர்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜெய்ப்பூருக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் இதுகுறித்து மேலும் கூறியது: நம்முடைய அணி சமபலம் நிறைந்த அணி. சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம். சேவாக், யூசுப் பதான் ஆகியோர் இந்தியாவின் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய வீரர்களாக இருப்பார்கள். இடது...

கங்குலியின் கனவு தகர்ந்தது

இந்திய அணியின் "மாஜி' கேப்டன் கங்குலியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. இவர், நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க இயலாது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் 2008, 2010 தொடரில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் கங்குலி. நான்காவது தொடருக்கான ஏலத்தில் கோல்கட்டா உட்பட, 10 அணிகளின் உரிமையாளர்களில், ஒருவர் கூட இவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இந்நிலையில், கொச்சி அணி...

உலக கோப்பை அனுபவம்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில், அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய அனுபவம் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், இலங்கையின் ஜெயசூர்யாவுக்கு உள்ளது. இவர்கள் இருவரும் தலா 444 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளனர். இதேபோல உலக கோப்பை தொடரில் அதிக போட்டிகளில் பங்கேற்று, சிலர் சாதனை படைத்துள்ளனர். இது குறித்த சிறப்பு பார்வை.இதுவரை நடந்துள்ள 9 உலக கோப்பை தொடர்களில், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத், ரிக்கி பாண்டிங் முன்னிலை...

கிரிக்கெட்டின் ஒபாமா தோனி

இந்திய அணி கேப்டன் தோனி தலைமை பண்பில் சிறந்து விளங்குகிறார். இவர் "கிரிக்கெட்டின் ஒபாமாவாக திகழ்கிறார், என, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. பதட்டமான நேரத்திலும் கூட மிகவும் "கூலாக செயல்படக் கூடியவர். இவர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா போல தலைமைப் பண்பில் மிகச் சிறந்து விளங்குவதாக, சக வீரர் பிரவீண் குமார் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் துவங்க உள்ள உலக கோப்பை தொடருக்கான...

இந்தியாவின் வெற்றிக்கு சச்சின் உதவுவார்

கடைசி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் சச்சின், இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கு முக்கிய உதவியாக இருப்பார்,'' என்று, முன்னாள் வீரர் பல்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து நடத்தும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்., 19 முதல் ஏப்., 2 வரை நடக்கிறது. இதுகுறித்த கடந்த 1983ல் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பல்வீந்தர் சிங் சாந்து (54) கூறியது: இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் உலக கோப்பை தொடர் தான்,...