இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கக் கிடைத்துள்ள வாய்ப்பு என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.ஜூன் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் ஆட்டம், ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முன்னணி வீரர்கள் சச்சின், சேவாக், யுவராஜ், கம்பீர் ஆகியோர் பங்கேற்கவில்லை. ஒருநாள் போட்டியில் தோனி விளையாடாததால் ரெய்னா கேப்டனாகியுள்ளார். முன்னணி வீரர்கள் அணியில் இடம் பெறாததால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து...

சென்னை கிங்ஸ் மீண்டும் சாம்பியன்

ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய், அஷ்வினின் அபார ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல், "டுவென்டி-20' தொடர் நடந்தது. நேற்று சென்னையில் நடந்த பைனலில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இரு...

புதிய கேப்டன் சுரேஷ் ரெய்னா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் "டுவென்டி-20 தொடருக்கு சுரேஷ் ரெய்னா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக காம்பிர், யுவராஜ் சிங் நீக்கப்பட்டனர். டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி, ஒரே ஒரு "டுவென்டி-20, ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.காம்பிர் கேப்டன்:"டுவென்டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில்...

வரலாறு படைக்குமா சென்னை கிங்ஸ்?

ஐ.பி.எல்., தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாறு படைக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ள சென்னை அணிக்கு, இம்முறை பைனல் சொந்த மண்ணில் நடப்பது சாதகமான விஷயம்.நான்காவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று முன் தினம் மும்பையில் நடந்த முதலாவது "பிளே-ஆப்' போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சந்தித்தது. இதில், முதலில்...

சச்சின், சானியா மீது வழக்கு

தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனு விவரம்:இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தனது பிறந்த நாளை 2010-ம் ஆண்டு ஜமைக்கா நாட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது மூவர்ண கொடியின் நிறத்தினாலான கேக்கை வெட்டிக் கொண்டாடியது வலைதளத்தில் வெளியாகி உள்ளது.இதேபோல...

கெய்ல் அதிரடியில் வீழ்ந்தது சென்னை

ஐ.பி.எல்., லீக் போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக 75 ரன்கள் விளாச, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத் தவறிய சென்னை அணி ஏமாற்றம் அளித்தது.நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த லீக்போட்டியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற...

முதலிடம் பெறுமா சென்னை ?

ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்பு உள்ளதால், கடும் போராட்டம் காத்திருக்கிறது.இந்தியாவில் நடக்கும் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. இதில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று மாலை நடக்கும் 69வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு...

"பிளே ஆப்' சுற்று எப்படி?

ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரின் லீக் சுற்றுகள் முடியவுள்ள நிலையில், "பிளே ஆப்' சுற்று போட்டிகள் விரைவில் துவங்குகின்றன. நான்காவது ஐ.பி.எல்., தொடரில் லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் முடிகின்றன. வரும் 24ம் தேதி முதல், "பிளே ஆப்' எனப்படும் அடுத்த சுற்று போட்டிகள் நடக்கின்றன. தற்போதைய நிலையில் சென்னை, பெங்களூரு அணிகள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன. கோல்கட்டா, பஞ்சாப், மும்பை அணிகள் இடையே, அடுத்த இரு இடங்களுக்கு பலத்த போட்டி காணப்படுகிறது. மற்றபடி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் என...

விளம்பர உலகின் "ஹீரோ' தோனி

விளம்பர உலகில் செல்வாக்குமிக்க விளையாட்டு வீரர்கள் வரிசையில் இந்திய கேப்டன் தோனி முன்னணியில் இருக்கிறார். இவர், நடால், கோப் பிரயண்ட் போன்ற சர்வதேச நட்சத்திரங்களை முந்தி, 10வது இடத்தை பிடித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் தோனி. கடந்த 2007ல் இவரது தலைமையிலான அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்றது. சமீபத்தில் 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றினார். ஐ.பி.எல்., தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் பெற்று தந்தார். இவர் தொட்டதெல்லாம்...

சச்சின் தந்த மிகப் பெரிய விருது

எனது பேட்டிங்கை சச்சின் பாராட்டிய அந்த தருணத்தை மறக்க முடியாது. இதுவே எனக்கு கிடைத்த மிகப் பெரிய விருது,''என, இளம் வீரர் வல்தாட்டி கூறியுள்ளார்.நான்காவது ஐ.பி.எல்., தொடர் இந்திய மண்ணில் நடக்கிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பிடித்துள்ள இளம் இந்திய வீரர் வல்தாட்டி (27 வயது) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 63 பந்தில் 120 ரன்கள் (2 சிக்சர், 19 பவுண்டரி) எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்....

சச்சினுக்கு பி.சி.சி.ஐ., விருது

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், "பாலி உம்ரிகர்' விருது வழங்கப்பட உள்ளது.பி.சி.சி.ஐ., சார்பில் வரும் மே 31ம் தேதி மும்பையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட்டில் சாதித்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. தவிர, 28 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி, உலக கோப்பை வென்றதையும் கொண்டாட உள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் கூறியது:கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட்டில்...

இந்திய அணிக்கு காம்பிர் கேப்டன்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக காம்பிர் தேர்வு செய்யப்பட்டார். சீனியர் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. தமிழகத்தின் பத்ரிநாத், சகா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.ஒரு "டுவென்டி-20', ஐந்து ஒரு நாள் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி, வரும் மே 28ல் வெஸ்ட் இண்டீஸ் புறப்படுகிறது. வரும் ஜூன் 4ல் ஒரு "டுவென்டி-20', ஜூன் 6, 8, 11, 13 மற்றும் 16ம் தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடக்கின்றது....

டி.ஆர்.எஸ்., முறை: பி.சி.சி.ஐ., எதிர்ப்பு

அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும், டி.ஆர்.எஸ்., முறையை அறிமுகம் செய்யும், ஐ.சி.சி.,யின் முடிவுக்கு, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2009 முதல் டெஸ்ட் போட்டிகளில் அம்பயர் தீர்ப்பை மறு பரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) முறை, அந்தந்த நாடுகளின் விருப்பத்துக்கு ஏற்ப நடைமுறையில் உள்ளது. இதுவரை 31 போட்டிகளில் பயன் படுத்தப்பட்ட இதில், ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா 2 முறை, அப்பீல் செய்யலாம். இதனிடையே, டி.ஆர்.எஸ்., முறையை, எதிர்வரும் காலங்களில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும்...

சதையை பார்க்கும் கிரிக்கெட் வீரர்கள்

ஐ.பி.எல்., பார்ட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் தவறாக நடந்து கொள்கின்றனர். நடனப் பெண்களின் சதையை தான் பார்க்கின்றனர்,'' என, தென் ஆப்ரிக்க நடனப் பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் பார்வையாளர்களை மகிழ்விக்க, அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் மும்பை அணிக்கான போட்டிகளில் நடனம் ஆடுவதற்காக தென் ஆப்ரிக்காவில் இருந்து 40 பெண்கள், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இரவில் போட்டிகள் முடிந்ததும் நடக்கும் பார்ட்டிகளில், நடக்கும் சம்பவங்கள் குறித்து கேபிரியல்லா (22) என்ற நடனப் பெண், சமீபத்தில் வெளியிட்ட "டுவிட்டர்'...

புனே அணிக்கு கைகொடுப்பாரா கங்குலி

ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள மற்றொரு லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, தோல்வியின் பிடியில் சிக்கியுள்ள புனே அணிக்கு கைகொடுக்க, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி காத்திருக்கிறார்.மொகாலியில், இன்று நடக்கவுள்ள ஐ.பி.எல்., தொடருக்கான மற்றொரு லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, யுவராஜ் சிங் வழிநடத்தும் புனே வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.கங்குலி எதிர்பார்ப்பு:புனே...

மே 13-ல் இந்திய அணி தேர்வு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடவுள்ள இந்திய அணியின் தேர்வு மே 13-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி தலைமையிலான தேர்வுக்குழுவினர் இந்திய அணியை தேர்வு செய்யவுள்ளனர். டெஸ்ட் போட்டிக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடர் மே 28-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 1-ம் தேதி இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டு செல்கிறது. அங்கு ஒரு இருபது ஓவர் ஆட்டத்திலும், 5 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடுகிறது.இருபது ஓவர் ஆட்டம் ஜுன் 4-ம் தேதி நடைபெறுகிறது....

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: டெல்லி அணியை கொச்சி வீழ்த்தியது

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்- கொச்சி டஸ்கர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வேணுகோபால் ராவ் 36 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய கொச்சி அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாத்தீவ் பட்டேல் 37 ரன்கள் (31 பந்து, 5 பவுண்டரி), ஹாட்ஜ் 24 ரன்கள் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்....