முதல் நாளில் 3 புதிய சாதனை

போல்வால்ட் போட்டியில் புதிய தேசிய சாதனையுடன் 6-வது தேசிய யூத் தட கள சாம்பியன்ஷிப் மதுரையில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.  அதைத் தொடர்ந்து மகளிர் 3,000 மீட்டர், ஆடவர் 5,000 மீட்டர் போட்டிகளில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.  ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் இறுதிப் போட்டியில் உத்தரப் பிரதேச வீரர் பர்மீந்தர் குமார் படேல் 4.30 மீ. உயரம் தாண்டி, 2007-ல் குஜராத் வீரர் விரேந்தர் சிங் படைத்த சாதனையை தகர்த்தார்.  இவரும் ஹரியாணா வீரர் ஜிதேந்தரும் தலா 4.30 மீ. தாண்டினாலும் முதலாவதாக 4-வது வாய்ப்பில் பர்மீந்தர் குமார் வென்றார்....

ஹரியாணாவுடன் தமிழகம் இன்று மோதல்

தமிழ்நாட்டில் நடைபெறும் 63-வது சந்தோஷ் கோப்பை தேசிய சீனியர் கால்பந்து சாம்பியன் போட்டியில் கிளஸ்டர் 7-ல் முதலிடம் பெற்ற ஹரியாணாவுடன் தமிழகம் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது. சென்னையில் ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இப் போட்டி விடுமுறை ரசிகர்களுக்கு விருந்தளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளஸ்டர் 8-ல் இடம்பிடித்திருந்த தமிழ்நாடு, லீக் சுற்றில் தான் எதிர்கொண்ட ஒவ்வோர் அணியையும் ஒரு கோலும் அடிக்கவிடாமல் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய அடுத்த கட்ட சுற்றுக்கான பயிற்சி ஆட்டம் போல ஒவ்வோர் அணியையும் தோற்கடித்து முன்னேறியது....

சாதிக்க தவறிய மும்பை அணி

ஐ.பி.எல்., தொடரில் இரண்டாவது முறையாக சாதிக்க தவறியது சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. சச்சின், ஜெயசூர்யா உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்கள் இடம் பெற்றும்தொடரின் அரையிறுதிக்கு கூட மும்பையால் முன்னேற முடியவில்லை. 38 முறை சாம்பியன்:மும்பை அணியை பொறுத்த வரை, உள்நாட்டு தொடரான ரஞ்சிக் கோப்பையில் அசத்தி உள்ளது. ரஞ்சி சாம்பியன் பட்டத்தை 38 முறை கைப்பற்றிய பெருமை மிக்கது. ஆனால் உள்நாட்டுதொடராக கருதப்படும் ஐ.பி.எல்.,தொடரில் முத்திரை பதிக்க முடியவில்லை.அதிரடி இல்லை: ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஜெயசூர்யாவின்...

டெல்லியை வெல்ல வேண்டிய இக்கட்டான நிலையில் பெங்களூரு அணி

ஜோகன்னஸ்பர்க்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில் வாழ்வா, சாவா என்ற நிலையில் கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, சேவக்கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை சந்திக்கிறது.தோல்வியுற்றால் போட்டியிலிருந்து வெளியேறுவதைத் தவிர வழியில்லை. இந்த அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் 2வது "டுவென்டி20' கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது....

ஐ.பி.எல்., லீக் சுற்றில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி

டர்பன்: ஐ.பி.எல்., லீக் சுற்றில் வரிசையாக 5 வெற்றிகளை பெற்று வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சறுக்கியது. பெங்களூரு அணியிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. கடைசி ஓவர் வரை போராடிய பெங்களூரு அணியின் வெற்றிக்கு ரோஸ் டெய்லர் மீண்டும் பக்கபலமாக இருந்தார். தென் ஆப்ரிக்காவில் 2வது ஐ.பி.எல்.,"டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 44 வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்...

சுதிர்மான் கோப்பை இறகுப்பந்து: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்தியா

குவாங்சோ: சுதிர்மான் கோப்பை இறகுப்பந்து போட்டியில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை 5-0 என்ற கணக்கில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.சர்வதேச அணிகள் பங்கேற்கும் 11வது சுதிர்மேன் கோப்பை இறகுப்பந்து போட்டி சீனாவில் உள்ள குவாங்சோவில் நடக்கிறது.  இதில் இந்தியா, இலங்கை உட்பட 34 அணிகள் பங்கேற்றுள்ளனஇதில் "3-பி' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, உக்ரைன் உள்ளிட்ட நான்கு அணிகள் விளையாடின. முதல் இரண்டு லீக் போட்டியில்...

காலிறுதியில் மன்கட் ஜோடி

அமெரிக்காவில் உள்ள லாங்போட் கீ என்ற இடத்தில் நடைபெறும் சரசோடா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் ஹர்ஷ் மன்கட், அமெரிக்காவின் கையஸ் வான்ட் ஹாஃப் ஜோடி தகுதி பெற்றது.முதல் சுற்று ஆட்டத்தில், இப்போட்டியின் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள மன்கட் ஜோடி 6-3, 6-2 என்ற கணக்கில் செர்பியாவின் விளாதிமீர் ஓப்ராடோவிக், செக். குடியரசின் ஆடம் வெஜ்மெல்கா ஜோடியை வெளியேற்றியது.காலிறுதியில் அமெரிக்காவின் பிராஸ்வெல், டெரெக் மைர்ஸ் ஜோடியை மன்கட் ஜோடி எத...

வங்கதேசத்துடன் இந்தியா இன்று மோதல்

கவுன்டன்:மலேசியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு அணிகள் விளையாடுகின்றன.அதில் இன்று நடக்கும் 7வது இடத்திற்கான போட்டியில் இந்தியா,வங்கதேச அணிகள் மோதுகின்றன. "பி"பிரிவில் இந்தியா.பாகிஸ்தான்,சீனா உள்ளிட்ட மூன்று அணிகள் லீக் சுற்றில் மோதின. நடப்புச் சாம்பியனான இந்தியா, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. அடுத்த ஆட்டத்தில் சீனாவுடன் டிரா (2-2) செய்தது. இதையடுத்து அரை இறுதி வாய்ப்பை இழந்த இந்தியா, 6 மற்றும் 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் வங்கதேசத்துடன் விளையாடுகிறது.இதில் வெற்றி...

விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை:ஸ்ரீசாந்த்

ஜோகனஸ்பர்க்: "என் மீது விழும் விமர்சனங்களை நான் எப்போதும் கண்டுகொள்வதில்லை,"என்றார் ஸ்ரீசாந்த்.இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்.காயம் மற்றும் மோசமான பார்ம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.காயத்திலிருந்து தெரிய இவர்,தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஐ.பி.எல்.,தொடரில் பஞ்சாப் அணி சார்பில் விளையாடி வருகிறார்.இதுவரை நான்கு போட்டிகளில் பந்து வீசிய இவர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.கடந்த 7 ம் தேதி...