உலக கோப்பை பைனலில் அரங்கேறிய சாதனைகள்

கடந்த 1987ல் இந்தியா, 1999ல் இங்கிலாந்து, 2003ல் தென் ஆப்ரிக்கா, 2007ல் வெஸ்ட் இண்டீஸ், 2015ல் ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற சாதனை படைத்தது ஆஸ்திரேலியா. * தவிர, சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது. கடந்த 2011ல் இந்திய அணி, சொந்த மண்ணில் கோப்பை வென்றது. நான்காவது கேப்டன் ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை வென்று...

உலக கோப்பை வென்றது ஆஸி - 5 முறை சாம்பியனாகி சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டியில் நியூசி., நிர்ணயித்த குறைந்த இலக்கான 183 ரன்னை ஆஸி., மிக எளிதாக அடைந்து உலக கோப்பையை தட்டி சென்றது. இதன் மூலம் 5வது முறையாக ஆஸி., உலக கோப்பையை வென்றுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டியில் , ஆஸி.,க்கு மிக சொற்ப அளவிலான இலக்கையே நியூஸிலாந்து நிர்ணயித்து. இதனால் ஆஸி., மிக எளிதாக எதிர்கொள்ளும் என்ற சூழலே ஏற்பட்டது. நியூஸிலாந்து விக்கெட்டுகளை ஆஸி., வீரர்கள் மள,மளவென சரித்தனர்.  நியூஸி 44.5 ஓவரில்...

ரெய்னாவின் புது வியூகம் - பவுன்சரை சமாளிக்க பயிற்சி

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் சாதிக்க, இந்திய அணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஸ்டார்க், ஜான்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பவுலர்களின் ‘பவுன்சர்களை’ சமாளிக்க, டென்னிஸ் பந்துகளை எகிறச் செய்து ரெய்னா பயிற்சியில் ஈடுபட்டார். ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும், விஷேச திட்டத்துடன் இந்திய வீரர்கள் பயிற்சி செய்கின்றனர்.  பாகிஸ்தானின் 7.1 அடி உயரம் கொண்ட முகமது...

பைனலில் நியூசிலாந்து அணி - வெளியேறியது தென் ஆப்ரிக்கா

பந்துக்கு பந்து பதட்டத்தை ஏற்படுத்திய உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்கா அணி சோகத்துடன் வெளியேறியது.  உலக கோப்பை தொடரில் இன்று நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் அபாட்டுக்குப்பதில் பிலாண்டர் வாய்ப்பு பெற்றார்.  தென்...

தென் ஆப்ரிக்கா சாதனை வெற்றி - வெளியேறியது இலங்கை அணி

இலங்கைக்கு எதிரான உலக கோப்பை காலிறுதியில் தாகிர், டுமினி ‘சுழலில்’ மிரட்ட, தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. தவிர, உலக கோப்பை ‘நாக்–அவுட்’ சுற்றில் தென் ஆப்ரிக்க அணி முதல் வெற்றி பெற்று சாதித்தது.  உலக கோப்பை தொடரின் காலிறுதி சுற்று இன்று துவங்கியது. சிட்னியில் நடந்த முதல் காலிறுதியில் இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.  தென்...

ரெய்னாவுக்கு திருமணம் - தோழியை கரம்பிடிக்கிறார்

இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரரான ரெய்னாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இந்திய அணியின் இளம் வீரர் ரெய்னா, 28.  இதுவரை 18 டெஸ்ட் (768 ரன்கள்) , 213 ஒரு நாள் (5316), 44 ‘டுவென்டி–20’ (947) போட்டிகளில் விளையாடி உள்ளார். உலக கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார்.  இவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. இது குறித்து ரெய்னாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில்,‘‘ ரெய்னா தாயாரின் தோழியின் மகள் பிரியங்கா சவுத்ரி.  சிறு வயதிலிருந்தே ரெய்னாவும், பிரியங்காவும் நெருங்கிய நண்பர்கள்....

பிரண்டன் டெய்லர் நம்பர் 1

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடரில் முதல் 38 போட்டிகளில் 31 சதங்கள் அடிக்கப்பட்ட போதும், இந்திய அணிக்கு எதிராக, எந்த அணி வீரரும் சதம் அடிக்கவில்லை.  நேற்று பிரண்டன் டெய்லர் (138) இதை முறியடித்தார். இதற்கு முன், பாகிஸ்தான் வீரர் மிஸ்பா, 76 ரன்கள் எடுத்தது தான் அதிகம். * உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் சதம் அடித்த முதல் ஜிம்பாப்வே வீரர் இவர் தான். இதற்கு முன், கெவின் குரான் 1983ல் 73 ரன்கள்...

சங்ககரா சாதனை சதம் - இலங்கை வெற்றி

ஸ்காட்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், தில்ஷன், சங்ககரா சதமடித்து கைகொடுக்க, இலங்கை அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில், இலங்கை, ஸ்காட்லாந்து அணிகள் மோதும் உலக கோப்பை 'ஏ' பிரிவு லீக் போட்டி இன்று நடந்தது.  இலங்கை அணியில் சண்டிமால், உபுல் தரங்கா, சேனநாயகே நீக்கப்பட்டு துஷ்மந்தா சமீரா, நுவன் குலசேகரா, குசால் பெரேரா சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், 'பேட்டிங்' தேர்வு...

51 பந்தில் சதம் - நிறைய சாதனைகள்

2வது அதிவேகம் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் நேற்று 51 பந்தில் சதத்தை எட்டினார் இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர்கள் பட்டியலில், 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் (50 பந்து, எதிர்–இங்கிலாந்து, 2011)  உள்ளார். * இந்த உலக கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக 52 பந்தில் சதம் அடித்தார். * ஒருநாள்...

அயர்லாந்து அணி திரில் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இன்று நடந்த மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதுவரை 2 வெற்றி, ஒரு தோல்வி உட்பட 4 புள்ளிகளுடன் உள்ள அயர்லாந்து அணி, மீதமுள்ள 3 போட்டியில், 2ல் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு...

பத்திரிகையாளர் மீது கோஹ்லி பாய்ச்சல்

பத்திரிகையாளர் ஒருவரை கடுமையாக திட்டிய கோஹ்லி புது சர்ச்சை கிளப்பினார். பெர்த்தில் நேற்று பயிற்சி முடித்து ‘டிரஸ்சிங் ரூமிற்கு’ திரும்பிய கோஹ்லி, இந்தியாவை சேர்ந்த ஒரு ஆங்கில நாளிதழின் பத்திரிகையாளரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.  இவர், தொடர்ந்து வசைபாட சக வீரர்களும் அந்த பத்திரிகையாளரும் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திற்கு பின் கோபத்திற்கான காரணம் தெரிய வந்தது. கோஹ்லி மற்றும் அவரது தோழியும் நடிகையுமான அனுஷ்கா பற்றி சர்ச்சைக்குரிய...

சங்ககரா சாதனை

பேட்டிங்கில் அசத்திய இலங்கையின் சங்ககரா, 70 பந்தில் சதத்தை எட்டினார்.  இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், 5வது இடத்தை அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங்குடன் (70 பந்து, எதிர்–நெதர்லாந்து, 2011) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் (50 பந்து, எதிர்–இங்கிலாந்து, 2011) உள்ளார். 23வது சதம் அபாரமாக ஆடிய இலங்கையின் சங்ககரா, 23வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஒருநாள்...

ஜிம்பாப்வே அணி தோல்வி - பாக்., அணி முதல் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், இன்று நடந்த உலக கோப்பைக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின.  பாகிஸ்தான் அணியில் யூனிஸ் கான் நீக்கப்பட்டு ரஹாத் அலி சேர்க்கப்பட்டார். 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, 'பேட்டிங்' தேர்வு செய்தார். பாகிஸ்தான்...