தெறிக்க விட்ட சென்னை - டில்லியை வீழ்த்தியது

ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியில் இன்று சென்னை வீரர்கள் 4 கோல் அடித்து டில்லி அணியை  தெறித்து ஓடச் செய்தனர்.  இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடக்கிறது. சென்னை நேரு மைதானத்தில் இன்று நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணியை எதிர்கொண்டது. இதில் ஜேஜே 2, மென்தோஜா 1, பெலிசாரி 1 என, சென்னை அணி 4 கோல் அடித்தது. டில்லி அணி சார்பில் யாரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் சென்னை அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ...

சேவக்கை தடுத்த சச்சின்

‘‘கடந்த 2007ல் ஓய்வு பெற்றுவிடலாம் என முடிவு செய்தேன். இதை சக வீரர் சச்சின்தான் தடுத்து விட்டார்,’’ என, இந்திய அணி முன்னாள் வீரர் சேவக் தெரிவித்தார். இந்திய அணியின் அதிரடி வீரர் சேவக், 37. டெஸ்ட் அரங்கில் இரு முறை முச்சதம் உள்ளிட்ட அதிக சாதனைகளை எட்டியவர். இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சமீபத்தில் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட உள்ளார்.  இது...

தோனிக்கு எதுவுமே தெரியலை - கவாஸ்கர் திடீர் தாக்கு

இந்திய அணி கேப்டன் தோனியிடம் புதிய திட்டங்களை செயல்படுத்தும் திறன் இல்லை. பவுலர்களை சரியான முறையில் கையாளத் தெரியவில்லை,’’ என, கவாஸ்கர் குற்றம் சுமத்தினார். இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என, வென்றது. மும்பையில் நடந்த கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 438 ரன் குவித்தது. இந்திய பவுலர்கள் சொதப்பல் காரணமாக குயின்டன் டி காக், டுபிளசி, டிவிலியர்ஸ் என, 3...

கும்ளே முதலிடம்

சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்தியாவின் கும்ளே (48 விக்.,), ஹர்பஜன் சிங் (42), கபில்தேவ் (40) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். * ஒருநாள் போட்டியில் இங்கு அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் வங்கதேசத்தின் முகமது ரபிக் (8 விக்.,) முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் அகார்கர், தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கல் தலா 7 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.  652 கடந்த 1985ல் இந்தியாவுக்கு...

இரண்டாவது ஒருநாள் போட்டி - இந்திய அணி அசத்தல் வெற்றி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள் அசத்த, 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.  இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள், நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட 72 நாட்கள் தொடரில் பங்கேற்கிறது.  முதலில் நடந்த ‘டுவென்டி–20’ தொடரை இந்திய அணி 0–2 என இழந்தது. கான்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி ம.பி.,யின் இந்துாரில்...

சாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்

களத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா. இவரது ஆதங்கம் நியாயமானது தான். சொந்த மண்ணில் சென்னை வீழ்ந்ததை யாராலும் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.                   சென்னையில், இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் (ஐ.எஸ்.எல்.) முதல் போட்டி நேற்று நடந்தது. இதில், சென்னை அணி, கோல்கட்டாவிடம் 2–3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.  சென்னை வசம் 53 சதவீதம் பந்து இருந்த போதும், ‘பினிஷிங்’ இல்லாததால்...

கிரிக்கெட் மைதானத்தில் தற்கொலை படை தாக்குதல்

ஆப்கனில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் மரணம் அடைந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆப்கனின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளது பக்டிக்கா பகுதி. பாகிஸ்தானின் எல்லைப்புற பகுதியான இங்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது வெடி குண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று வேகமாக வந்து பார்வையாளர்கள் இருந்த பகுதியின் மீது மோதியது. இந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....

ஜென்டில்மேன் ஆட்டமா கிரிக்கெட்?

கிரிக்கெட்டை ‘ஜென்டில்மேன்’ விளையாட்டு என அழைப்பார்கள். ஆனால், களத்தில் வீரர்களின் செயல்பாடு மோசமாகவே உள்ளது. * 1981ல் பெர்த்தில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி, பாகிஸ்தானின் ஜாவித் மியாண்தத்தை உதைத்ததாக கூறப்பட்டது. பதிலுக்கு மியாண்தத், பேட்டை உயர்த்திக் கொண்டு வர ‘டென்ஷன்’ ஏற்பட்டது. * 1992, உலக கோப்பை தொடரில் இந்தியாவின் கிரண் மோரே, மியாண்தத் மோதல், 1996, உலக கோப்பை தொடரில் அமிர் சோகைல், பிரசாத் உரசல், 2008ல் நடந்த சிட்னி...

ரெய்னா சதம் - தொடரை வென்றது இந்தியா ‘ஏ’

வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 3வது ஒரு நாள் போட்டியில் ரெய்னா சதம் அடிக்க, இந்திய ‘ஏ’ அணி ‘டக்வொர்த்– லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்றது.  இதன் மூலம் தொடரை 2–1 என கைப்பற்றியது. இந்தியா ‘ஏ’, வங்கதேசம் ‘ஏ’ அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் மோதின. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என சமநிலை வகித்தது.  இரு அணிகள் மோதிய கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது....

இந்திய அணி அறிவிப்பு - குர்கீரத் சிங் வாய்ப்பு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ‘ஆல்–ரவுண்டர்’ குர்கீரத் சிங் அறிமுக  வாய்ப்பு பெற்றுள்ளார்.  இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ போட்டி வரும் அக்., 2ல் தரம்சாலாவில் நடக்கவுள்ளது.  மீதமுள்ள போட்டிகள் கட்டாக் (அக்., 5,), கோல்கட்டா (அக்., 8) நகரங்களில் நடக்கவுள்ளன....

சிங் தான் ‘கிங்’ * இந்தியா ‘ஏ’ அசத்தல் வெற்றி

முதலாவது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் அசத்திய இந்தியா ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ‘ஆல்–ரவுண்டராக’ மிரட்டிய குர்கீரத் சிங்(65 ரன், 5 விக்.,) வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தார். இந்தியா ‘ஏ’, வங்கதேச ‘ஏ’ அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச ‘ஏ’ அணி கேப்டன் மோமினுல் ஹக் ‘பீல்டிங்’...

தோனிக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தடை

கேப்டன் தோனிக்கு எதிரான வழக்கை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்திய ஒருநாள், ‘டுவென்டி–20’ அணி கேப்டன் தோனி, 34. கடந்த 2013ல் வெளியான ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்தில் விஷ்ணு போல சித்தரிக்கப்பட்டு இருந்தார்.  இவரது கைகளில் ‘ஷூ’ உட்பட பல விளம்பர பொருட்கள் இருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூகநல ஆர்வலர் ஜெயக்குமார், கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதை...

தோனியா...கோஹ்லியா - கேப்டன் தேர்வில் புது குழப்பம்

ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு தோனிக்குப் பதில் கோஹ்லியை கேப்டனாக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.                           இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி 3 ‘டுவென்டி–20’, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் என, 72 நாட்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.                                    ...

முதல் மூன்று பந்தில் ஹாட்ரிக்

இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி ஒருநாள் போட்டியில், வொர்செஸ்டர்ஷைர் அணியின் ஜோ லீச் முதல் மூன்று பந்தில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இங்கிலாந்தில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் கவுன்டி ஒருநாள் போட்டி நடக்கிறது. லண்டனில் நடந்த ‘குரூப்–ஏ’ போட்டியில் வொர்செஸ்டர்ஷைர், நார்தாம்ப்டன்ஷைர் அணிகள் மோதின. இரண்டாவது முறை: ‘டாஸ்’ வென்ற நார்தாம்ப்டன்ஷைர் அணி முதலில் ‘பேட்’ செய்தது. ஜோ லீச் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் மூன்று பந்தில் ரிச்சர்டு...

கோஹ்லி கேப்டனாவதை தடுத்த சீனிவாசன்

சீனிவாசன் மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால் மூன்று ஆண்டுக்கு முன்பே கோஹ்லி இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகி இருப்பார்,’’ என, முன்னார் தேர்வாளர் ராஜா வெங்கட் தெரிவித்தார். கடந்த 2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றது. இதன் பின் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் மோசமான தோல்விகளை பெற்றது. இதனால் இந்திய அணி கேப்டன் தோனியை மாற்ற பல்வேறு முயற்சிகள் நடந்ததாக செய்திகள் வெளியாகின. இது உண்மை தான் என்கிறார் அப்போதைய தேர்வுக்குழு உறுப்பினர் ராஜா வெங்கட்,...

இந்திய அணியில் சேவக், ஜாகிர், யுவராஜ் - வங்கதேச தொடரில் வாய்ப்பு

வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் சேவக், ஜாகிர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் உள்ளிட்ட , ‘சீனியர்களுக்கு’ வாய்ப்பு தரப்படும் எனத் தெரிகிறது.        எட்டாவது ஐ.பி.எல்., தொடர் முடிந்த பின், ஜூன் 7ல் இந்திய அணி வங்கதேசம் செல்கிறது. இங்கு ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.         இதற்கான இந்திய அணி வரும் 20ம் தேதி தேர்வு செய்யப்படுகிறது. கோஹ்லி உள்ளிட்ட பல வீரர்கள், இத்தொடரில்...

ஏணி வைத்தாலும் எட்டாது - 632 மடங்கு அதிகம்

உலக கோப்பை தொடரின் அரையிறுதியுடன் திரும்பிய இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ. 5.4 கோடி கிடைத்தது. அதேநேரம் கடந்த 1983ல் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 18.8 லட்சம் தான் கிடைத்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் சமீபத்தில் உலக கோப்பை தொடர் நடந்தது. இதில் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ. 24.7 கோடி (லீக் சுற்று செயல்பாடு சேர்த்து) கிடைத்தது. பைனலில் வீழ்ந்த நியூசிலாந்து அணி ரூ. 12.6 கோடி பெற்றது. லீக் சுற்றில் தொடர்ச்சியான 6 வெற்றியுடன்...

உலக கோப்பை பைனலில் அரங்கேறிய சாதனைகள்

கடந்த 1987ல் இந்தியா, 1999ல் இங்கிலாந்து, 2003ல் தென் ஆப்ரிக்கா, 2007ல் வெஸ்ட் இண்டீஸ், 2015ல் ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற சாதனை படைத்தது ஆஸ்திரேலியா. * தவிர, சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது. கடந்த 2011ல் இந்திய அணி, சொந்த மண்ணில் கோப்பை வென்றது. நான்காவது கேப்டன் ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை வென்று...

உலக கோப்பை வென்றது ஆஸி - 5 முறை சாம்பியனாகி சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டியில் நியூசி., நிர்ணயித்த குறைந்த இலக்கான 183 ரன்னை ஆஸி., மிக எளிதாக அடைந்து உலக கோப்பையை தட்டி சென்றது. இதன் மூலம் 5வது முறையாக ஆஸி., உலக கோப்பையை வென்றுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டியில் , ஆஸி.,க்கு மிக சொற்ப அளவிலான இலக்கையே நியூஸிலாந்து நிர்ணயித்து. இதனால் ஆஸி., மிக எளிதாக எதிர்கொள்ளும் என்ற சூழலே ஏற்பட்டது. நியூஸிலாந்து விக்கெட்டுகளை ஆஸி., வீரர்கள் மள,மளவென சரித்தனர்.  நியூஸி 44.5 ஓவரில்...

ரெய்னாவின் புது வியூகம் - பவுன்சரை சமாளிக்க பயிற்சி

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் சாதிக்க, இந்திய அணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஸ்டார்க், ஜான்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பவுலர்களின் ‘பவுன்சர்களை’ சமாளிக்க, டென்னிஸ் பந்துகளை எகிறச் செய்து ரெய்னா பயிற்சியில் ஈடுபட்டார். ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும், விஷேச திட்டத்துடன் இந்திய வீரர்கள் பயிற்சி செய்கின்றனர்.  பாகிஸ்தானின் 7.1 அடி உயரம் கொண்ட முகமது...

பைனலில் நியூசிலாந்து அணி - வெளியேறியது தென் ஆப்ரிக்கா

பந்துக்கு பந்து பதட்டத்தை ஏற்படுத்திய உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்கா அணி சோகத்துடன் வெளியேறியது.  உலக கோப்பை தொடரில் இன்று நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் அபாட்டுக்குப்பதில் பிலாண்டர் வாய்ப்பு பெற்றார்.  தென்...

தென் ஆப்ரிக்கா சாதனை வெற்றி - வெளியேறியது இலங்கை அணி

இலங்கைக்கு எதிரான உலக கோப்பை காலிறுதியில் தாகிர், டுமினி ‘சுழலில்’ மிரட்ட, தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. தவிர, உலக கோப்பை ‘நாக்–அவுட்’ சுற்றில் தென் ஆப்ரிக்க அணி முதல் வெற்றி பெற்று சாதித்தது.  உலக கோப்பை தொடரின் காலிறுதி சுற்று இன்று துவங்கியது. சிட்னியில் நடந்த முதல் காலிறுதியில் இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.  தென்...