உலக சாதனையை தவறவிட்டார் சேவாக்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது முறை மூன்று சதம் அடித்து உலக சாதனை படைக்கும் வாய்ப்பை 7 ரன்களில் நழுவ விட்டார் இந்திய வீரர் வீரேந்திர சேவாக்.

293 ரன்கள் எடுத்த நிலையில் முத்தையா முரளிதரன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து சேவாக் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய வீரர் டொனால்டு பிராட்மன் மற்றும் மேற்கிந்தித் தீவுகள் வீரர் பிரையன் லாரா ஆகியோர் இரண்டு முறை 300 ரன்கள் எடுத்துள்ளனர்.

சேவாக் இதற்கு முன்பு 2008ல் சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும், 2004ல் முல்டானில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் 300 ரன்கள் எடுத்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் மூன்று முறை 300 ரன்கள் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டி: இந்​திய அணி​யில் தமி​ழக வீரர் அஸ்​வின்

இலங்​கைக்கு எதி​ரான டுவென்டி20 போட்​டி​யில் விளை​யா​டும் இந்​திய அணி​யில் தமி​ழக வீரர் ஆர்.அஸ்​வின் இடம்​பி​டித்​துள்​ளார்.

இரு அணி​க​ளும் 2 டுவென்டி 20 ஆட்​டங்​க​ளி​லும்,​ 5 ஒரு தின ஆட்​டங்​க​ளி​லும் விளை​யா​டு​கின்​றன.

அ​தற்​கான அணி​யைத் தேர்வு செய்​வ​தற்​காக தேர்​வுக் குழு மும்​பை​யில் புதன்​கி​ழமை கூடி​யது. கூட்​டத்​துக்​குப் பின்,​ டுவென்டி20 மற்​றும் முதல் 2 ஒரு தின ஆட்​டங்​க​ளுக்​கான அணித் தேர்வு குறித்து இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யச் செய​லர் என்.சீனி​வா​சன் அறி​வித்​தார்.

இ​தில் டுவென்டி20 ஆட்​டங்​க​ளுக்​கான அணி​யில் தமி​ழக ஆல்​ர​வுண்​டர் ஆர்.அஸ்​வின் இடம்​பெற்​றுள்​ளார்.

2-வது டெஸ்​டில் அபா​ர​மா​கப் பந்​து​வீ​சிய ஸ்ரீசாந்த் இரு அணி​க​ளி​லும் இடம் பிடித்​துள்​ளார்.

ஒரு தின ஆட்​டங்​க​ளுக்​கான அணி​யில் இடம் பெறாத இஷாந்த் சர்மா,​ டுவென்டி20 ஆட்​டங்​க​ளுக்​கான அணி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

உத்​த​ரப் பிர​தேச வீரர் சுதீப் தியாகி,​ தில்லி வீரர் ஆசிஷ் நெஹ்ரா ஆகி​யோர் அணி​யில் இடத்​தைத் தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ள​னர்.

ஜா​கீர் கான்,​ ஹர்​ப​ஜன் ஆகி​யோ​ருக்கு டுவென்டி20 ஆட்​டங்​க​ளில் இருந்து ஓய்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இரு அணி​க​ளுக்கு இடை​யே​யான முதல் டுவென்டி20 ஆட்​டம் டிசம்​பர் 9-ல் நாக​பு​ரி​யி​லும்,​ 2-வது ஆட்​டம் டிசம்​பர் 12-ல் மொஹா​லி​யி​லும்,​ முதல் ஒரு தின ஆட்​டம் டிசம்​பர் 15-ல் ராஜ்​கோட்​டி​லும்,​ 2-வது ஆட்​டம் டிசம்​பர் 18-ல் விசா​கப்​பட்​டி​னத்​தி​லும் நடை​பெ​றும்.

அணி விவ​ரம்:​ ​

டு​வென்டி20:​ தோனி ​(கேப்​டன்)​,​ சேவாக்,​ கம்​பீர்,​ சுரேஷ் ரெய்னா,​ யுவ​ராஜ்,​ தினேஷ் கார்த்​திக்,​ யூசுப் பதான்,​ ஆர்.அஸ்​வின்,​ இஷாந்த் சர்மா,​ ஆசிஷ் நெஹ்ரா,​ ஸ்ரீசாந்த்,​ அசோக் டிண்டா,​ சுதீப் தியாகி,​ பிரக்​யான் ஓஜா,​ ரோஹித் சர்மா.

ஒரு தின ஆட்​டம்:​​ தோனி ​(கேப்​டன்)​,​ சச்​சின்,​ சேவாக்,​ கம்​பீர்,​ சுரேஷ் ரெய்னா,​ யுவ​ராஜ்,​ ரவீந்​திர ஜடேஜா,​ ஹர்​ப​ஜன்,​ ஜாகீர் கான்,​ பிர​வீண் குமார்,​ ஆசிஷ் நெஹ்ரா,​ ஸ்ரீசாந்த்,​ சுதீப் தியாகி,​ பிரக்​யான் ஓஜா,​ விராட் கோலி.

தொடரை கைப்பற்ற இந்தியா "ரெடி'

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மும்பையில் துவங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்தியா தயாராக உள்ளது. தவிர, டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடத்தை கைப்பற்றி சாதிக்கவும் காத்திருக்கிறது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் துவங்குகிறது.

"நம்பர்-1' வாய்ப்பு: இந்த டெஸ்டில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலில், 124 புள்ளிகளுடன் முதல் முறையாக முதலிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது முதலிடத்தில் உள்ள தென் ஆப்ரிக்க அணி 2வது இடத்துக்கு தள்ளப்படும்.

வருகிறார் முரளி விஜய்: சகோதரி திருமணத்துக்கு செல்வதால், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் காம்பிர் இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார். முதல் இரண்டு டெஸ்டிலும் சதம் கடந்த இவர் இல்லாதது, அணிக்கு பின்னடைவு தான். இவருக்குப் பதில் தமிழக வீரர் முரளி விஜய் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளார்.

"டாப் ஆர்டர்' பலம்: கான்பூரில் அதிரடி சதம் அடித்த சேவக், இன்றும் நம்பிக்கை தரலாம். டிராவிட் மீண்டும் சதம் அடிக்கலாம். "டாப் ஆர்டரில்' லட்சுமண் மட்டும் தான் இன்னும் சதம் அடிக்காமல் உள்ளார். இந்தக்குறையை மும்பை டெஸ்டில் நீக்குவார் என எதிர்பார்க்கலாம். தவிர, யுவராஜ், தோனி ஆகியோரும் பின்வரிசையில் பொறுப்பான ஆட்டத்தை தருவார்கள் என நம்பப்படுகிறது.

ஜாகிர் கான் எதிர்பார்ப்பு: காயத்திலிருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், இரண்டு போட்டியிலும் எதிர்பார்த்த அளவில் சோபிக்கவில்லை. தனது சொந்தமண்ணில் இவர் எழுச்சி காணலாம். சுழலில் ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா நம்பிக்கை தந்தனர். இன்று அமித் மிஸ்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங் பலம்: இம்முறை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற வேகத்தில் வந்த இலங்கை அணிக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இருப்பினும் மீண்டும் ஒருமுறை பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கும் பட்சத்தில், இங்கு முதல் டெஸ்ட் வெற்றியை பெற்று, தொடரை சமன் செய்யலாம். இதற்கு தில்ஷன், பரணவிதனா, கேப்டன் சங்ககரா, ஜெயவர்தனா உள்ளிட்ட வீரர்கள் உதவுவார்கள்.

கடைசி வாய்ப்பு: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முரளிதரன் "சுழலில்' இலங்கை அணியை கைவிட்டது தான் தொடர் பின்னடைவுக்கு காரணம். இந்தியாவில் தனது கடைசி டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் அவர் மும்பையில் சாதிக்க முயற்சிக்கலாம். வேகப்பந்து வீச்சில் தம்மிகா பிரசாத் காயம் குணமடையாததால், வெலகேதராவுடன் குலசேகரா அல்லது திலகரா பெர்ணான்டோ களமிறங்கலாம். மெண்டிஸ் அல்லது ஹெராத் இருவரில் ஒருவருக்குத் தான் வாய்ப்பு கிடைக்கும்

வெற்றியை தொடர்வாரா தோனி

இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மும்பையில் துவங்குகிறது. ""இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்,'' என, இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை மும்பையில் துவங்குகிறது.

சகோதரி திருமணத்துக்கு செல்வதால், இதில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் காம்பிர் கலந்து கொள்ளமாட்டார். முதல் இரண்டு டெஸ்டிலும் சதம் கடந்த இவர் இல்லாதது, அணிக்கு பெரும் பின்னடைவே. இவருக்குப் பதில் தமிழக வீரர் முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கும் எனத்தெரிகிறது.

"நம்பர்-1' முக்கியமல்ல: மும்பை டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில், முதல் முறையாக முதலிடத்தை கைப்பற்றும். இது இந்திய கிரிக்கெட்டுக்கும் சிறப்பான தருணமாக இருக்கும். 

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" தொடர்ந்து எப்போதும் போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். வீரர்கள் ரேங்கிங்கை மறந்து விட்டு போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் "நம்பர்-1' இடத்துக்கு வருவது என்பது முக்கியமல்ல. நமது வெற்றி நடையை எப்போதும் போல தொடர வேண்டும்,'' என்றார்.

முரளிதரன் ஏமாற்றம்: இலங்கை அணி, இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. ஆனால் ஒரு போட்டியிலாவது வென்றுவிட வேண்டும் என கடும் முயற்சி செய்து வருகிறது. 

இம்முறை அதிக எதிர்பார்பில் இங்கு வந்த அந்த அணிக்கு, பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க, பவுலர்கள் சொதப்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முரளிதரன் "சுழலில்' ஏமாற்றினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் மோசமாக பந்து வீசினோம். இது தான் தொடரின் பின்னடைவுக்கு காரணம்,'' என்றார்.

சங்ககரா நம்பிக்கை: இது குறித்து இலங்கை அணி கேப்டன் சங்ககரா கூறுகையில்,"" முரளிதரன் இன்னும் சிறப்பான பவுலர் தான். அவர் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தியாவில் கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் அவர், 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவார் என நாங்கள் நம்புகிறோம். 

தொடரை வெல்ல முடியாவிட்டாலும் மும்பை போட்டியில் வென்று 1-1 என சமநிலைப்படுத்த முயற்சிப்போம். அது தான் எங்களின் பெரிய இலக்கு,'' என்றார்.