
அமெரிக்காவுக்கு எதிரான உலக கோப்பதொடரின் லீக் போட்டியை போர்ச்சுகல் அணி ‘டிரா’ செய்தது.
பிரேசிலில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘ஜீ’ பிரிவு லீக் போட்டியில் போர்ச்சுகல், அமெரிக்கா அணிகள் மோதின.
இதில் துவக்கம் முதல் அசத்திய போர்ச்சுகல் அணிக்கு நானி, போட்டியின் 5வது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இதற்கு அமெரிக்க வீரர்களால் முதல் பாதியில் பதிலடி கொடுக்கமுடியவில்லை.
பின் விறுவிப்பாக நடந்த இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க அணிக்கு ஜோன்ஸ் (64), டெம்ப்சே (81) ஆகியோர் இரட்டை அடி கொடுத்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்க மும்முரமாக போராடி போர்ச்சுகல் அணிக்கு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பந்தை மற்றொரு போர்ச்சுகல் வீரர் வரேலா (90+5) கடைசி நிமிடத்தில் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
இதையடுத்து அமெரிக்காவின் வெற்றி வாய்ப்பு பரிபோனது.
இறுதியில் போட்டி 2-2 என ‘டிரா’ ஆனது.
0 comments:
Post a Comment