இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு டி 20 போட்டியிலும் விளையாட உள்ளது.
அதில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் இந்திய கேப்டனான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் ப்ளட்சர் கிரிக்கெட் வாரியத்தை தொடர்பு கொண்டு மிகுந்த அனுபவம் உள்ள டிராவிட் அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொண்டதை தொடர்ந்து டிராவிட் இப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக...