அனுபவம் தான் வெற்றிக்கு காரணம்: ஜடேஜா

தியோதர் டிராபி தொடருக்காக கட்டாக் மைதானத்தில் விளையாடியது நல்ல அனுபவமாக அமைந்தது. அந்த அனுபவம் தான் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சாதிக்க உதவியது,'' என, ரவிந்திர ஜடேஜா தெரிவித்தார்


இந்தியா, இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று முன் தினம் கட்டாக்கில் நடந்தது. இப்போட்டியில் சுழலில் அசத்திய இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அணியின் வெற்றிக்கு வித்திட்ட இவர், ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

தனது செயல்பாடுகள் குறித்து ஜடேஜா கூறியது: கட்டாக், பாரபதி மைதானம் எனக்கு மிகவும் ராசியானது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தியோதர் டிராபி தொடருக்காக மூன்று போட்டிகளில் இம்மைதானத்தில் விளையாடினேன். அது நல்ல அனுபவமாக அமைந்தது. இதனால் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்து வீச முடிந்தது.

இப்போட்டியில் இலங்கை வீரர் உபுல் தரங்கா, சிறப்பாக விளையாடி கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் என்னிடம் வந்த சேவக்," சிறப்பாக பந்து வீசுமாறு' அறிவுறுத்தினார்.

ஆடுகளம் பந்து வீச்சுக்கு நல்ல முறையில் ஒத்துழைத்த நிலையில், துல்லியமாக பந்து வீசி தரங்கவை அவுட்டாக்கினேன். 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றது மகிழ்ச்சி அளித்தது. இருப்பினும் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தால் கூடுதல் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.


தற்போது தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளோம். கோல்கட்டாவில் நடக்க உள்ள 4 வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம். இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.

கிரிக்கெட்டின் வைரம் சச்சின்

இந்திய துணைக் கண்டத்தின் கிரிக்கெட் வைரம் சச்சின்,'' என, ஹனீப் முகமது தெரிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹனீப் முகமது. இதுவரை 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 12 சதம் உட்பட 3,915 ரன்கள் குவித்துள்ளார்.

நேற்று தனது 75 வது பிறந்த நாளை கொண்டாடிய ஹனீப் முகமது, இந்திய வீரர் சச்சினை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியது:

இந்தியாவின் சச்சின், லாலா அமர்நாத், வெஸ்ட் இண்டீசின் சோபர்ஸ், பிரையன் லாரா ஆகியோரை கடந்த நூற்றாண்டின் சிறந்த வீரர்களாக கருதுகிறேன். கிரிக்கெட் மீது சச்சின் கொண்ட ஈடுபாட்டை கண்டு ஆச்சரியம் அடைகிறேன்.

அவரது ஆட்டத்தை இன்றும் விரும்பி பார்க்கிறேன். கிரிக்கெட்டை பொறுத்த வரை இந்திய துணைக் கண்டத்தின் வைரம் சச்சின். கிரிக்கெட் அரங்கில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய போட்டிகள் மறக்க முடியாதவை. இவ்வாறு ஹனீப் தெரிவித்தார்

இந்திய அணியில் இஷாந்த், கார்த்திக்

இலங்கை அணிக்கு எதிராக அடுத்து நடக்க உள்ள இரண்டு ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நாக்பூரில் நடந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. மூன்றாவது போட்டி நாளை ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் நடக்கிறது.

நான்காவது போட்டி வரும் 24ம் தேதி கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ளது.

இவ்விரு போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இஷாந்த் சர்மா புதிதாக சேர்க்கப்பட்டனர்.

தடை விதிக்கப்பட்டுள்ள தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார். பன்றிக் காய்ச்சலால் அவதிப்பட்ட ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில் இஷாந்த் சர்மா வாய்ப்பு பெற்றுள்ளார். விரல் காயம் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ் அணியில் நீடிக்கிறார். அடுத்து வரும் போட்டிகளில் இவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று, நான்காவது போட்டிக்கான இந்திய அணி:

சேவக்(கேப்டன்), காம்பிர், சச்சின், யுவராஜ், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன், ஜாகிர் கான், நெஹ்ரா, இஷாந்த் சர்மா, விராத் கோஹ்லி, சுதிப் தியாகி, பிரவீண் குமார், பிரக்யான் ஓஜா.

ஐ.பி.எல்(I.P.L) ., -3 கால அட்டவணை


IPL Season 3 - Match Schedule
~ March-April 2010 ~

Fri March-121st match - Deccan Chargers v Kolkata Knight Riders
Sat March-132nd match - Mumbai Indians v Rajasthan Royals
Sat March-133rd match - Kings XI Punjab v Delhi Daredevils
Sun March-144th match - Kolkata Knight Riders v Royal Challengers Bangalore
Sun March-145th match - Chennai Super Kings v Deccan Chargers
Mon March-156th match - Rajasthan Royals v Delhi Daredevils
Tue March-167th match - Royal Challengers Bangalore v Kings XI Punjab
Tue March-168th match - Kolkata Knight Riders v Chennai Super Kings
Wed March-179th match - Delhi Daredevils v Mumbai Indians
Thu March-1810th match - Royal Challengers Bangalore v Rajasthan Royals
Fri March-1911th match - Delhi Daredevils v Chennai Super Kings
Fri March-1912th match - Deccan Chargers v Kings XI Punjab
Sat March-2013th match - Rajasthan Royals v Kolkata Knight Riders
Sat March-2014th match - Mumbai Indians v Royal Challengers Bangalore
Sun March-2115th match - Deccan Chargers v Delhi Daredevils
Sun March-2116th match - Chennai Super Kings v Kings XI Punjab
Mon March-2217th match - Mumbai Indians v Kolkata Knight Riders
Tue March-2318th match - Royal Challengers Bangalore v Chennai Super Kings
Wed March-2419th match - Kings XI Punjab v Rajasthan Royals
Thu March-2520th match - Mumbai Indians v Chennai Super Kings
Fri March-2621st match - Rajasthan Royals v Deccan Chargers
Sat March-2722nd match - Kings XI Punjab v Kolkata Knight Riders
Sat March-2723rd match - Royal Challengers Bangalore v Delhi Daredevils
Sun March-2824th match - Rajasthan Royals v Chennai Super Kings
Sun March-2825th match - Deccan Chargers v Mumbai Indians
Mon March-2926th match - Delhi Daredevils v Kolkata Knight Riders
Tue March-3027th match - Mumbai Indians v Kings XI Punjab
Wed March-3128th match - Chennai Super Kings v Royal Challengers Bangalore
Wed March-3129th match - Delhi Daredevils v Rajasthan Royals
Thu April-130th match - Kolkata Knight Riders v Deccan Chargers
Fri April-231st match - Kings XI Punjab v Royal Challengers Bangalore
Sat April-332nd match - Chennai Super Kings v Rajasthan Royals
Sat April-333rd match - Mumbai Indians v Deccan Chargers
Sun April-434th match - Kolkata Knight Riders v Kings XI Punjab
Sun April-435th match - Delhi Daredevils v Royal Challengers Bangalore
Mon April-536th match - Deccan Chargers v Rajasthan Royals
Tue April-637th match - Chennai Super Kings v Mumbai Indians
Wed April-738th match - Rajasthan Royals v Kings XI Punjab
Wed April-739th match - Kolkata Knight Riders v Delhi Daredevils
Thu April-840th match - Royal Challengers Bangalore v Deccan Chargers
Fri April-941st match - Kings XI Punjab v Mumbai Indians
Sat April-1042nd match - Deccan Chargers v Chennai Super Kings
Sat April-1043rd match - Royal Challengers Bangalore v Kolkata Knight Riders
Sun April-1144th match - Delhi Daredevils v Kings XI Punjab
Sun April-1145th match - Rajasthan Royals v Mumbai Indians
Mon April-1246th match - Deccan Chargers v Royal Challengers Bangalore
Tue April-1347th match - Mumbai Indians v Delhi Daredevils
Tue April-1348th match - Chennai Super Kings v Kolkata Knight Riders
Wed April-1449th match - Rajasthan Royals v Royal Challengers Bangalore
Thu April-1550th match - Chennai Super Kings v Delhi Daredevils
Fri April-1651st match - Kings XI Punjab v Deccan Chargers
Sat April-1752nd match - Royal Challengers Bangalore v Mumbai Indians
Sat April-1753rd match - Kolkata Knight Riders v Rajasthan Royals
Sun April-1854th match - Kings XI Punjab v Chennai Super Kings
Sun April-1855th match - Delhi Daredevils v Deccan Chargers
Mon April-1956th match - Kolkata Knight Riders v Mumbai Indians
Wed April-21Semi-Final - TBC v TBC
Thu April-22Semi-Final - TBC v TBC
Sat April-243rd Place Play-off - TBC v TBC
Sun April-25Final - TBC v TBC