சச்சின் இல்லாமல் முதல் முறையாக...

உலக கோப்பை அரங்கில் முதல் முறையாக சச்சின் இல்லாமல் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது. உலக கோப்பை(50 ஓவர்) வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இதற்கு ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சினின் ஆட்டம் முக்கிய காரணம்.  1992ல் சிட்னியில் நடந்த உலக கோப்பை தொடரில், 19வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக களம் கண்டார்.  இதில் அரை (54*) சதம் விளாசினார். பின், 1996(31, சிட்னி), 1999 (45, மான்செஸ்டர்),...

படுக்கையை நகர்த்திய பேய் - பயந்து ஓடிய பாக்., வீரர்

பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் சோகைல் தங்கியிருந்த ஓட்டல் அறையின் படுக்கையை பேய் நகர்த்தியதாம். இந்த பயத்தில் அலறி ஓடிய இவர், மானேஜர் அறையில் தஞ்சம் அடைந்தாராம். நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.  கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ரிட்ஜஸ் லாடிமிர் ஓட்டலில் வீரர்கள் தங்கியுள்ளனர். இதில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஹாரிஸ் சோகைல், 26, தங்கியிருந்த அறையில், நள்ளிரவில் திடீரென படுக்கை நகர்ந்துள்ளது. உடனடியாக...

ஐ.பி.எல்., சூதாட்டம் - மவுனம் கலைத்தார் தோனி

ஐ.பி.எல்., சூதாட்ட பிரச்னையில் என் பெயரையும் இணைத்து வெளியாகும் கற்பனை செய்தியை எப்போதும் தடுக்க முடியாது,’’ என, இந்திய அணி கேப்டன் தோனி கூறினார்.       ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்த ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்ப்பித்தது.  இதில், சென்னை அணி கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 வீரர்கள் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது....

வேதனையில் சாதனை வீரர்கள்

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கான அணியில் யுவராஜ் சிங், பீட்டர்சன், போலார்டு உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது வியப்பான விஷயம். இவர்களை பற்றி  விவரம்: யுவராஜ் சிங், 33(இந்தியா): ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த ‘ஆல்–ரவுண்டர்’ தான் யுவராஜ். மொத்தம் 293 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 8,329 ரன்கள் குவித்துள்ளார்.  கடந்த 2011 உலக கோப்பை தொடரில் 362 ரன்கள் எடுத்து, 15...

நியூசி., ஜோடி உலக சாதனை - இலங்கையை மீண்டும் வென்றது

எலியாட், ரான்கி ஜோடி உலக சாதனை படைக்க, இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்தின் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 4 போட்டிகள் முடிவில், நியூசிலாந்து அணி 2–1 என, முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது போட்டி டுனிடினில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. நியூசிலாந்து அணிக்கு கப்டில், ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி...

இந்திய அணியில் போதுமான மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள்

இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டும், சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுமான ராகுல் டிராவிட் பேட்டி ஒன்றில் கூறியதாவது:– இந்திய அணி உலக கோப்பையை மீண்டும் கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அணியில் போதுமான அளவு மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். இந்திய அணியோடு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த உலக கோப்பையை போலவே இந்த உலக கோப்பையின் போட்டி முறை இருக்கிறது. இது என்னை கவர்ந்து இழுக்கவில்லை. இந்த முறையில் முன்னணி அணிகள் கால் இறுதிக்கு எளிதில் தகுதி பெற்றுவிடும். இவ்வாறு அவர்...

டிவிலியர்ஸ் உலக சாதனை

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்த தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் சாதனை மழை பொழிந்தார். அதிவேக அரைசதம், அதிவேக சதம் கடந்து உலக சாதனை படைத்தார். தென் ஆப்ரிக்க அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.      தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது.  இரண்டாவது போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று நடந்தது. மார்பக புற்று...

விறுவிறு உலக கோப்பை விதிகள் - டிராவிட் வியப்பு

உள்வட்டத்துக்குள் 5 பேர் நிற்பது, இரண்டு புதிய பந்துகள் என, புதிய விதிகளால், உலக கோப்பை தொடரில் விறுவிறுப்பு அதிகரிக்கும்,’’ என, டிராவிட் தெரிவித்தார்.       ஐ.சி.சி., சார்பில் 11வது உலக கோப்பை கிரிக்கெட், வரும் பிப்., 14 முதல் மார்ச் 29 வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் நடக்கவுள்ளது.        இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியது:       கடந்த 2011ஐ விட,...

இந்தியாவுக்கு மீண்டும் உலக கோப்பை - கங்குலி கணிப்பு

உலக கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும்,’’ என, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இங்கிலாந்து அணி விளையாடுகிறது. மெல்போர்னில் நாளை நடக்கவுள்ள லீக் போட்டியில், இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. முத்தரப்பு தெடாருக்கு பின், வரும் பிப்., 14ல் துவங்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இதில் ‘நடப்பு...

சாதனை மழையில் ஆஸி., - உலக கோப்பைக்கு இன்னும் 29 நாட்கள்

உலக கோப்பை வரலாற்றில், பைனல் போட்டிகள் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால், 2003ல் நடந்த பைனல் ஒருதலைபட்சமாக இருந்தது.  இதில், ஆஸ்திரேலியா மட்டும் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணி, படுமோசமாக விளையாடி அதிர்ச்சி அளித்தது.                          தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் நடந்த இந்த பைனலில், "டாஸ்' வென்ற அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி சற்றும் எதிர்பாராதவிதமாக "பீல்டிங்'...

தோனி–கோஹ்லி ஒப்பிடலாமா? கங்குலி காட்டம்

டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை இப்போது தான் விராத் கோஹ்லி ஏற்றுள்ளார். போதிய அனுபவம் பெறும் போது, சிறப்பாக செயல்படுவார். இவரது தலைமைப் பண்பை தோனியுடன் ஒப்பிடுவது சரியல்ல,’’ என, கங்குலி தெரிவித்தார்.        ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 0–2 என இழந்தது. இதன் இரண்டு (அடிலெய்டு, சிட்னி) போட்டியில் கோஹ்லி கேப்டனாக செயல்பட்டார்.  களத்தில் இவரது ஆக்ரோஷ செயல்பாடு அனைவரையும் கவர்ந்தது....

உலக கோப்பை அணி - மீண்டும் கிளார்க் கேப்டன்

உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயத்தில் அவதிப்படும் மைக்கேல் கிளார்க் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் அடுத்த மாதம் 21ம் தேதிக்கு முன் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும்.  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.  இதில் காயத்தால் (தோள்பட்டை) அவதிப்படும் கிளார்க் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்....

டிராவிட் சாதனை முறியடிப்பு

நேற்று 140 ரன்கள் எடுத்த கோஹ்லி (7 இன்னிங்ஸ், 639 ரன்கள்), ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரில், அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் பட்டியலில், முன்னாள் கேப்டன் டிராவிட்டை முந்தி முதலிடம் பிடித்தார். கடந்த 2003–04ல் ஆஸ்திரேலிய மண்ணில் டிராவிட், 619 ரன்கள் (8 இன்னிங்ஸ்)  எடுத்திருந்தார். லட்சுமண் (494 ரன்கள், 2003), சச்சின் (493 ரன்கள், 2007) 3, 4வது இடத்தில் உள்ளனர்.  86 ஆண்டுக்குப் பின்... நேற்று 4வது சதம் கடந்த விராத்...

உலக கோப்பை அணி - யுவராஜ், விஜய்க்கு நோ

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்த்த யுவராஜ் சிங் புறக்கணிக்கப்பட்டார். ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஸ்டூவர்ட் பின்னி வாய்ப்பு பெற்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ளது. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி கடந்த டிச., 4ல் அறிவிக்கப்பட்டது. இதிலிருந்து 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் படேல் தலைமையில் நடந்தது. இதில், கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளட்சர் ‘வீடியோ கான்பெரன்சிங்’...

கோஹ்லியின் ஆக்ரோஷம் சரியா?

களத்தில் கோஹ்லி ஆக்ரோஷமாக செயல்படுவதில் என்ன தவறு இருக்கிறது. இவரது அணுகுமுறையை ஆஸ்திரேலிய அணியினரே பாராட்டுகின்றனர்,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார்.  ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 0–2 என தொடரை இழக்க, டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி திடீரென ஓய்வை அறிவித்தார்.  வரும் 6ம் தேதி சிட்னியில் துவங்கும் நான்காவது டெஸ்டில் கேப்டனாக விராத் கோஹ்லி...

பிராட்மேனை நெருங்கும் சங்ககரா

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், சங்ககரா இரட்டை சதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 356 ரன்கள் எடுத்த இலங்கை அணி முன்னிலை பெற்றது.  இதன்மூலம் சங்ககரா, டெஸ்ட் அரங்கில் அதிகமுறை இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனை நெருங்குகிறார். நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து வென்றது.  இரண்டாவது மற்றும் கடைசி...

சச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா

டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னிங்ஸ்) சாதனையை தகர்த்தார். நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. இரண்டாவது மற்றும் கடைசி போட்டி வெலிங்டன் இன்று துவங்கியது. இதன் முதல் இன்னிங்சில், நியூசிலாந்து அணி 221 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது.  இலங்கை அணிக்கு...

எடுபடாத கோஹ்லி சமாதானம் - ஓய்வு முடிவில் தோனி உறுதி

டெஸ்ட் போட்டிகளில் இருந்தே ஓய்வு பெறும் அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது,’’ என, தோனியிடம் கேட்ட கோஹ்லி, அவரை சமாதானம் செய்ய முயற்சித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்தியாவுக்கு 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் உலக கோப்பை வென்று தந்தவர் தோனி. டெஸ்ட் போட்டிகளிலும் துவக்கத்தில் சிறப்பாகத்தான் செயல்பட்டார்.        2011 உலக கோப்பை தொடருக்கு முன் 24 டெஸ்டில் 14 வெற்றி, 7 ‘டிரா’ செய்த தோனிக்கு 3 போட்டிகளில் மட்டும்...

தோனிக்கு சிக்கல் கொடுத்த கூட்டணி - ஓய்வின் பின்னணி என்ன?

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி திடீரென ஓய்வு பெற்றதற்கு, விராத் கோஹ்லி–ரவி சாஸ்திரி கூட்டணியே காரணம் என கூறப்படுகிறது.  இவர்களது ஆதிக்கம் அதிகரிக்க, தோனி ஓரங்கட்டப்பட்டுள்ளார். வேறுவழியின்றி ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி தந்துள்ளார். இந்திய அணிக்கு இரண்டு உலக கோப்பை பெற்று தந்த பெருமைமிக்கவர் தோனி. டெஸ்டில் மட்டும் சறுக்கினார். அதிலும் அன்னிய மண்ணில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தார். தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில்...