
பயிற்சியாளர் பிளட்சருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தோனிக்கு, பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டப்பட்டு, இந்திய அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். விரைவில் பிளட்சர் நீக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ...