உலக கோப்பை கவுன்ட் டவுண்

உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகள் (தென் கொரியா, ஜப்பான்) இணைந்து 17வது தொடரை 2002ல் நடத்தின. 

அதுவும் ஆசிய மண்ணில் முதன்முறையாக நடந்த இத்தொடரில் மொத்தம் 32 அணிகள், எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதல் சுற்றில் மோதின.

இத்தொடரில் அதிர்ச்சி தோல்விகளுக்கு பஞ்சமில்லை. ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய பிரான்ஸ் அணி, முதல் சுற்றின் 3 போட்டியிலும் தோல்வியடைந்து வெளியேறியது. 

இதேபோல முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினா, உருகுவே  அணிகளும், முதல் சுற்றுடன் திரும்பின.


கொரியா சாதனை

காலிறுதியில் அசத்திய தென் கொரியா, ஸ்பெயின் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனை படைத்தது.
ஆனால் அரையிறுதியில், ஜெர்மனியிடம் தோல்வி அடைந்த தென் கொரியா, கடைசியில் 4வது இடம் பிடித்து ஆறுதல் அடைந்தது.

0 comments:

Post a Comment